பெடோக்கில் 5 வாகனங்கள் பயங்கர மோதல்..!! 3 பேர் மருத்துவமனையில்..!

பெடோக்கில் 5 வாகனங்கள் பயங்கர மோதல்..!! 3 பேர் மருத்துவமனையில்..!

சிங்கப்பூரின் பெடோக் (Bedok) பகுதியில் 5 வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் 3 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த விபத்து செப்டம்பர் 7ஆம் தேதி மதியம் சுமார் 1:35 மணியளவில் நியூ அப்பர் சாங்கி சாலையில் நடந்துள்ளதாக சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் ஒரு சிறிய பேருந்து (Mini Bus), ஒரு லாரி மற்றும் 3 கார்கள் என மொத்தம் 5 வாகனங்கள் சிக்கியிருந்தன.

விபத்தில் சிக்கிய சிறிய பேருந்து சாலையோரத்தில் இருந்த போக்குவரத்து சிக்னல் கம்பத்தில் மோதியதில், அதன் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. முன்பக்க கண்ணாடியும் உடைந்திருந்தது

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சிங்கப்பூர் தற்காப்புப் படை (SCDF) சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தது.

அங்கு சிறிய பேருந்தின் ஓட்டுநர் வாகனத்திற்குள் சிக்கியிருந்ததால், அவரை மீட்க ஹைட்ராலிக் மீட்பு கருவிகள் பயன்படுத்தப்பட்டது. பின்னர் அவர் பத்திரமாக மீட்கப்பட்டார்.

இந்த விபத்தில் காயமடைந்த மூன்று நபர்களை சாங்கி பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டதாக SCDF தெரிவித்துள்ளது

காயம் அடைந்தவர்களின் விவரங்கள்:
38 வயதான சிறிய பேருந்து ஓட்டுநர்
31 வயதான லாரி ஓட்டுநர்
35 வயதான கார் ஓட்டுநர்
என காவல்துறை தெரிவித்துள்ளது.

சிறிய பேருந்து ஓட்டுநர் தற்போது காவல்துறையின் விசாரணைக்கு உதவி வருகிறார்.

இந்த விபத்து தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த விபத்து மீண்டும் ஒருமுறை, சிங்கப்பூர் சாலைகளில் சிறிய கவனக்குறைவும் எவ்வளவு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை நினைவூட்டியுள்ளது. வாகன ஓட்டிகள் வேகத்தைக் கட்டுப்படுத்தி, போக்குவரத்து விதிகளைப் பின்பற்றி, எப்போதும் கூடுதல் எச்சரிக்கையுடன் பயணிப்பது அவசியம். சாலையில் நாம் எடுக்கும் ஒவ்வொரு நொடியின் கவனமும், ஒரு உயிரைக் காப்பாற்றக்கூடும்.