சிங்கப்பூரில் பரபரப்பு..!!6 மாதங்களுக்குப் பிறகு வெளியான அதிரடி தீர்ப்பு..!!

சிங்கப்பூரில் பரபரப்பு..!!6 மாதங்களுக்குப் பிறகு வெளியான அதிரடி தீர்ப்பு..!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நிதி நிறுவனத்துக்கு அனுப்ப வேண்டிய `$6,650 தொகையை முன்னாள் மனைவியின் வங்கிக் கணக்குக்கு தவறுதலாக அனுப்பிய ஆடவர், அந்தப் பணத்தை மீண்டும் பெறுவதற்காக சுமார் ஆறு மாதங்கள் சட்டப் போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஜேம்ஸ் ஜோனதன் என்ற அந்த ஆடவர், கடந்த 2025 டிசம்பர் 7ஆம் தேதி, ‘Wise’ என்ற நிறுவனத்துக்கு அனுப்ப வேண்டிய பணத்தை, தவறுதலாக ‘Wife’ என்ற பெயரில் சேமித்து வைத்திருந்த தனது முன்னாள் மனைவி ஈடல் இங்கின் கணக்குக்கு அனுப்பிவிட்டார்.

இருவரும் ஏற்கனவே 2021ஆம் ஆண்டு மணவிலக்கு பெற்றிருந்தாலும், தங்களது பிள்ளையின் பராமரிப்பு தொடர்பான விவகாரங்களுக்காக தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்துள்ளனர்.

பணம் தவறுதலாக அனுப்பப்பட்டதை உணர்ந்த ஜோனதன், டிசம்பர் 7 முதல் 15ஆம் தேதி வரை 10 முறை மின்னஞ்சல் மூலம் முன்னாள் மனைவியைத் தொடர்புகொண்டு, $`6,650 தொகையைத் திருப்பித் தருமாறு கேட்டுக்கொண்டார். ஆனால், அதற்கு அவர் பதிலளிக்கவில்லை.

இதையடுத்து, ஜோனதன் தனது வழக்கறிஞர் மூலம் பணத்தைத் திருப்பித் தரக் கோரி அதிகாரப்பூர்வக் கடிதம் அனுப்பினார். அதற்கு முன்னாள் மனைவி தனது வழக்கறிஞர் மூலம் பதிலளித்தார்.

தாம் மோசடி நடவடிக்கைகளில் சிக்கிக்கொள்ளக்கூடும் என்ற சந்தேகம் இருப்பதாகவும், பணத்தை அனுப்பிய நபரின் அடையாளத்தை முதலில் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், அந்தப் பணத்தை காவல்துறையிடமும் ஒப்படைத்தார்.

இதனால் பிரச்சினை மேலும் நீடித்ததுடன், இரு தரப்பினரும் ஒருவருக்கு எதிராக ஒருவர் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இந்த வழக்கில் துணைப் பதிவாளர் மார்க் லிம், செப்டம்பர் 7ஆம் தேதி வெளியிட்ட தீர்ப்பில், முன்னாள் மனைவியின் நடவடிக்கை முறையற்றது என்றும், தேவையில்லாமல் பிரச்சினையை நீட்டித்ததாகவும் குறிப்பிட்டார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பான சட்டச் செலவுகளாக `$7,000-க்கும் அதிகமான தொகையை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட $6,650 தொகை இறுதியில் ஜோனதனுக்கு மீண்டும் வழங்கப்பட்டது.

தீர்ப்பை வெளியிட்ட மார்க் லிம், தவறுதலாகப் பெறப்பட்ட பணத்தை முன்னாள் கணவருக்கு உடனடியாகத் திருப்பி அனுப்பியிருந்தால், இவ்வளவு பெரிய சட்டச் செலவை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது என்று குறிப்பிட்டார்.

இந்தச் சம்பவம், தவறுதலாக வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டால், அதைத் தாமதமின்றி உரிய நபரிடம் திருப்பி வழங்குவதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.