சிங்கப்பூரிலிருந்து ஜோகூர் சென்றவருக்கு அதிர்ச்சி..!! 2 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய ஸ்பீக்கருக்கு RM59 வரி!

சிங்கப்பூரில் வாங்கிய ஸ்பீக்கரை மலேசியாவுக்குக் கொண்டு சென்றபோது, 59 ரிங்கிட் சுங்கவரி செலுத்த வேண்டியிருந்ததாக ஆடவர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரைச் சேர்ந்த 36 வயதான சுயதொழில் புரியும் வாங் ஜுன்யோங் (Wang Jun Yong), கடந்த அக்டோபர் 20ஆம் தேதி இரவு சுமார் 11 மணியளவில் காரில் ஜோகூர் பாருவுக்குச் சென்றுள்ளார்.
அப்போது, ஜோகூர் இஸ்கந்தர் சுங்கச்சாவடியில் மலேசிய அதிகாரிகள் அவரது காரைச் சோதனை செய்தனர். காரின் பின்புறத்தில் இருந்த ஸ்பீக்கரைக் கண்ட அதிகாரிகள், அதற்கான வாங்கிய ரசீதைக் கேட்டுள்ளனர்.
அந்த ஸ்பீக்கரை 2024ஆம் ஆண்டு சுமார் S$185க்கு வாங்கியதாகவும், ஒரே ஒரு முறை மட்டுமே பயன்படுத்தியதாகவும் வாங் தெரிவித்துள்ளார். பின்னர் பயன்படுத்தாமல் பெட்டியில் வைத்திருந்த அந்த ஸ்பீக்கரை வீட்டுக்குக் கொண்டு செல்லும்போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
வாங்கிய ரசீதை அதிகாரிகளிடம் காட்டிய பின்னர், பொருளின் மதிப்பில் 10 சதவீதமான RM59 (சுமார் S$18.50) சுங்கவரியைச் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
இந்த அனுபவத்தை வாங் தனது TikTok பக்கத்தில் பகிர்ந்ததைத் தொடர்ந்து, இணையவாசிகள் பலரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர். வெளிநாடுகளுக்குச் செல்லும்போது மின்னணுப் பொருட்களைக் கொண்டு செல்வதில் கூடுதல் கவனம் தேவை எனச் சிலர் கருத்துத் தெரிவித்தனர்.
மலேசிய சுங்கத்துறையின் விதிகளின்படி, நாட்டிற்குள் நுழையும் பயணிகள் வரி விதிக்கப்படக்கூடிய பொருட்கள் உள்ளிட்டவற்றை அறிவிக்க வேண்டும். தரைவழி உள்ளிட்ட விமானம் அல்லாத போக்குவரத்து வழியாக நுழையும் பயணிகளுக்கு, குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் RM500க்குக் குறைவான சில பொருட்களுக்கு வரிவிலக்கு கிடைக்கலாம்.
இருப்பினும், பொருளின் வகை மற்றும் பொருந்தும் விதிமுறைகளைப் பொறுத்து வரி விதிக்கப்படலாம்.
எனவே, சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்குச் செல்லும்போது மின்னணுப் பொருட்கள் மற்றும் பிற பொருட்களுக்கான சுங்க விதிகளை முன்கூட்டியே சரிபார்ப்பது நல்லது.
Follow us on :
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
