சிங்கப்பூரில் டிரைவிங் லைசென்ஸ் (Driving Licence) பெறுவது எப்படி?

சிங்கப்பூரில் டிரைவிங் லைசென்ஸ் (Driving Licence) பெறுவது எப்படி?

சிங்கப்பூரில் வாகனங்களை சட்டப்பூர்வமாக இயக்க Driving Licence (ஓட்டுநர் உரிமம்) கட்டாயமாகும். நீங்கள் சிங்கப்பூர் குடிமகனாக இருந்தாலும், நிரந்தர குடியிருப்பாளராக (PR) இருந்தாலும் அல்லது வேலை நிமித்தமாக அங்கு வசிப்பவராக இருந்தாலும், உங்கள் Pass வகைக்கு ஏற்ப Driving Licence பெறுவதற்கான நடைமுறைகள் மாறுபடும்.

1. Singapore Citizen / Permanent Resident (PR):
சிங்கப்பூர் குடிமக்கள் மற்றும் PR-க்கள் Class 3 / Class 3A Driving Licence பெற கீழ்க்கண்ட படிநிலைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
👉Eye Test (கண் பரிசோதனை)
👉Basic Theory Test (BTT)
👉Provisional Driving Licence (PDL)
👉Practical Driving Lessons
👉Simulator Training
👉Final Theory Test (FTT)
👉Practical Driving Test

இந்த அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெற்ற பிறகே Class 3 அல்லது Class 3A Driving Licence வழங்கப்படும்.

2. Employment Pass (EP), PEP, S Pass, EntrePass, Dependant Pass, LTVP / LTVP+ வைத்திருப்பவர்கள்: இந்த வகை Pass வைத்திருப்பவர்களும் சிங்கப்பூரில் புதிய Driving Licence பெறலாம்.

தகுதிகள்:
👉18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.
👉செல்லுபடியாகும் (Valid) Pass வைத்திருக்க வேண்டும்.
👉Singapore Citizen / PR-க்கள் பின்பற்றும் அதே நடைமுறைகளான BTT, PDL, Practical Lessons, Simulator, FTT மற்றும் Practical Test ஆகிய அனைத்தையும் முடிக்க வேண்டும்.

3. வெளிநாட்டு Driving Licence வைத்திருக்கும் Work Permit / S Pass ஊழியர்கள்: உங்களிடம் ஏற்கனவே உங்கள் சொந்த நாட்டின் Driving Licence இருந்தால், அதை சிங்கப்பூரில் பயன்படுத்த சில நிபந்தனைகள் உள்ளன. முதலில் Basic Theory Test (BTT)-ல் தேர்ச்சி பெற வேண்டும்.
அதன் பிறகு உங்கள் வெளிநாட்டு Driving Licence-ஐ Singapore Class 3C Licence-ஆக மாற்றிக்கொள்ள (Conversion) விண்ணப்பிக்கலாம்.

4. வேன், Pick-up போன்ற வாகனங்களை வேலைக்காக இயக்குபவர்கள்: வேலைக்காக Van, Pick-up போன்ற வாகனங்களை இயக்க விரும்புபவர்கள் Practical Driving Test-ல் தேர்ச்சி பெற வேண்டும். அதன் பிறகே Class 3 / Class 3A Licence பெற முடியும்.

5. வெளிநாட்டு Driving Licence இல்லாத Work Permit ஊழியர்கள்: உங்களிடம் எந்தவொரு வெளிநாட்டு Driving Licence-மும் இல்லையெனில், நேரடியாக Driving Course-ல் சேர முடியாது.

முதலில் Traffic Police அல்லது அங்கீகரிக்கப்பட்ட Driving Centre-இல் உங்கள் Eligibility (தகுதி) சரிபார்க்கப்பட வேண்டும். அதன் பிறகே பயிற்சி மற்றும் தேர்வுகளுக்கான நடைமுறைகளைத் தொடங்க முடியும்.

குறிப்பு: சிங்கப்பூரில் Driving Licence பெறும் விதிமுறைகள், நீங்கள் வைத்திருக்கும் Pass மற்றும் வெளிநாட்டு Licence இருப்பதையோ இல்லையோ பொறுத்து மாறுபடும். எனவே, விண்ணப்பிப்பதற்கு முன் உங்கள் தகுதியை உறுதி செய்து, தேவையான தேர்வுகள் மற்றும் பயிற்சிகளை முடிப்பதன் மூலம் மட்டுமே சிங்கப்பூரில் சட்டப்பூர்வமாக வாகனம் ஓட்ட முடியும்.