ஐரோப்பாவை உலுக்கும் காட்டுத்தீ! 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேற்றம்!

ஐரோப்பாவை உலுக்கும் காட்டுத்தீ! 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேற்றம்!

ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் கடுமையான வெப்பநிலை மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக கட்டுப்பாடு இன்றி பரவி வரும் காட்டுத்தீயால் 200,000க்கும் அதிகமான மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர்.

இரண்டு நாடுகளிலும் தீயின் வேகம் மிக தீவிரமாக இருப்பதால் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாமல் இரு நாடுகளும் தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் அவசர உதவியை நாடியுள்ளன.


பிரான்ஸின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஜிரோண்டே, லாண்டெஸ் வட்டாரங்களில் தீ மிக வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக முக்கிய நகரான போர்டோவை நோக்கி தீ நகர்வதால் அதன் புறநகர் பகுதிகள் அவசரமாக காலி செய்யப்பட்டு வருகின்றன.

பிரான்சில் மட்டும் இதுவரை 141,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். சுற்றுலா த்தலமான கேப் ஃபெரட் தீபகற்பத்தின் முறை ஒரே ஒருசாலையும் தீயால் சூழப்பட்டதால் அங்கிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் படகுகள் மற்றும் படகு டாக்ஸிகள் மூலம் கடல் வழியாக மீட்டெடுக்கப்பட்டனர்.

 

தீயணைப்பு படையினர் சோர்வடைந்துள்ளதால் அதிபர் இமானுவேல் மேக்ரோன் தீயை அணைக்கும் பணியில் ராணுவத்தை ஈடுபடுத்தி உள்ளார். இப்பணியில் 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

ஸ்பெயினின் தலைநகர் மட்ரிட் மற்றும் குவாடலஹரா ஆகிய மத்திய பகுதிகளில் இரண்டு பெரிய காட்டு தீ ஒன்றாக இணைந்த மட்ரிட் நகரை அச்சுறுதி வருகிறது. இதனால் ஸ்பானிய பிரதமர் பெட்ரோ சான் செஸ் முதலாவது தேசிய அவசர நிலையை பிரகடனப்படுத்தி உள்ளார்.

 

ஸ்பெயினில் இதுவரை 60,000 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் 20,000க்கும் மேற்பட்டோர் வீட்டுக்குள்ளயே முடங்கி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிர்ஷ்டவசமாக இரு நாடுகளிலும் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. செக் குடியரசு, சிலோவாக்யா போன்ற பிற ஐரோப்பிய நாடு ஹெலிகாப்டர்கள் மற்றும் தீயணைப்பு விமானங்களை அனுப்பி உதவி வருகின்றன.