சிங்கப்பூர் வேலை கிடைத்துவிட்டது என நம்பிய 6 தமிழர்கள்..!கடைசியில் $14,000 மோசடி!

சிங்கப்பூர் வேலை கிடைத்துவிட்டது என நம்பிய 6 தமிழர்கள்..!கடைசியில் $14,000 மோசடி!

சிங்கப்பூரில் மாதம் 1 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என்ற ஆசையை நம்பி தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 கிராமப்புற இளைஞர்கள் தங்களின் ஒட்டுமொத்த சேமிப்பினான $14,000க்கும் அதிகமான பணத்தை இழந்து தவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட 21 வயது முதல் 49 வயதிற்கு உட்பட்ட 6 இந்திய நாட்டவர்களுக்கும், சிங்கப்பூர் மனித வள அமைச்சகத்தின் (MOM) பெயரில் போலியாக தயாரிக்கப்பட்ட வேலை அனுமதி கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.

தங்களுக்கு 5 ஒர்க் பெர்மிட் ( Work Permit) மற்றும் ஒரு எஸ் பாஸ்(S Pass) கிடைத்துவிட்டதாக அவர்கள் நம்பியுள்ளனர்.

இந்த மோசடியின் பின்னணியில் தன்னை ஒரு சிங்கப்பூரர் என்றும் திரைப்படத் தயாரிப்பாளர் என்றும் அடையாளப்படுத்திய ‘அப்துல் ரஹீம்’ என்பவர் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 

கடந்த மாதம் (ஜூன்) 6ம் தேதி முதல் ஜூன் 9 வரையிலான காலகட்டத்தில் PayNow மற்றும் வங்கிக் கணக்குகள் வழியாக 9 தவணைகளில் மொத்தம் $14,140 அந்த நபருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் திறன் பயிற்சி வகுப்பு என்ற பெயரிறும் தனியாக பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிங்கப்பூர் காவல்துறையில் அதிகாரப்பூர்வமாகபுகார் அளிக்கப்பட்டுள்ளது.

 


வெளிநாட்டு ஊழியர் வேலைக்கு அமர்த்துதல் சட்டம் மற்றும் வேலைவாய்ப்பு முகமைகள் சட்டத்தின் கீழ், சிங்கப்பூர் மனிதவள் அமைச்சகம் (MOM) தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

குற்றம் சாட்டப்பட்டுள்ள அப்துல் ரஹீம் என்பவர் மீது கடந்த 2025 ஆம் ஆண்டிலும் இதே போன்று மற்றொரு வெளிநாட்டவர் குழுவை ஏமாற்றியதாக ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற போலி வேலைவாய்ப்பு முகவர்களிடம் ஏமாறுவதைத் தவிர்க்க சிங்கப்பூரில் வேலை பெற விரும்பும் வெளிநாட்டு ஊழியர்கள் தங்களின் வேலை அனுமதி ஆவணங்களில் உண்மை தன்மையை MOM இணையப்பக்கம் வழியாக நேரடியாக சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.