ஆச்சர்ட் சாலையில் விபத்து..!! பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையில் அனுமதி…!!!

ஆச்சர்ட் சாலையில் விபத்து..!! பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையில் அனுமதி...!!!

சிங்கப்பூர்:ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள 313@Somerset ஷாப்பிங் காம்ப்ளக்ஸுக்கு எதிரே நேற்று மாலை ஒரு சாலை விபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவத்தைக் காட்டும் காணொளி ஒன்று இணையத்தில் வைரலானது.

நேற்று மாலை சுமார் 6.15 மணியளவில் ஆர்ச்சர்ட் சாலையில் ஒரு விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது.

சிவப்பு விளக்கை கவனிக்காமல் அவசரமாக சாலையைக் கடக்க முயன்ற நபர் மீது ஒரு கார் மோதியது.

அவர் உடனடியாக டான் டொக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அது கூறியது.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.