சுமார் 17 ஆண்டுகால காத்திருப்பு!! ஐரோப்பியக் கோப்பையைக் கைப்பற்றியுள்ள டாட்டன்ஹாம்!!
டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் UEFA ஐரோப்பா லீக் கோப்பையை வென்றுள்ளது.இன்று(மே 22) அதிகாலை நடந்த இறுதி சுற்று ஆட்டத்தில் மென்செஸ்ட்டர் யுனைட்டட் குழுவை எதிர்கொண்டது.
இந்த ஆட்டம் ஸ்பெயினின் பில்பௌ நகரில் உள்ள San Mames மைதானத்தில் நடைபெற்றது.
இறுதியில் டாட்டன்ஹாம் அணி 1-0 என்ற கோல் கணக்கில் கோப்பையை கைப்பற்றியது.ஆட்டத்தின் 42 வது நிமிடத்தில் Johnson கோல் அடித்து டாட்டன்ஹாம் அணி இறுதி சுற்றில் வெற்றியைத் தேடி தந்தார்.
1984 ஆம் ஆண்டுக்கு பிறகு டாட்டன்ஹாம் அணி வென்றுள்ள முதல் ஐரோப்பியக் கோப்பை இது.