அனைத்து உலக சிலம்பப் போட்டி - சிங்கப்பூர் பிடித்த இடம்? முழு விவரம் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும்.
மலேசியாவில் 8 – வது அனைத்து உலக சிலம்ப போட்டி சமீபத்தில் நடைபெற்றது. இது மலேசியா, இந்தியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, துபாய், அபுதாபி ஆகியவற்றிலிருந்து அணிகள் போட்டியிட்டனர்.
சுமார் 500க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர்கள் போட்டியிட்டனர்.
ஆசான் மணிவண்ணன் தலைமையிலான சிங்கப்பூர் அணி ஆகஸ்ட் 9, 10 ஆம் தேதிகளில் மலேசியாவில் நடந்த சிலம்பப் போட்டியில் பங்கேற்றது.
சிங்கப்பூர் அணியும் சகானா சொக்கநாதன்(17) தனித்திறன் பிரிவில் தங்கமும் தொடு முறை பிரிவில் வெள்ளியும் வென்றுள்ளனர்.
சிங்கப்பூரின் ஸ்வேதா சொக்கநாதன்(20) தனித்திறன் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளனர்.
சிங்கப்பூரின் ரக்சித் நிவின் மணிவண்ணன்(17) தனித்திறன் பிரிவில் வெண்கல பதக்கம் வென்றுள்ளனர்.
68 தங்கங்களை வென்ற மலேசியாவின் முதல் இடத்தையும், 11 தங்கங்களை வென்ற இந்தியா இரண்டாம் இடத்தையும், 10 தங்கங்களை வென்ற மலேசியா அடிதடி சிலம்பணி மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
சிங்கப்பூர் இந்த சிலம்பப் போட்டியில் நான்காம் இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த போட்டிகளில் இலக்கானது, சிலம்பக் கலையை ஆசிய நாடுகளுக்கு மட்டும் இன்றி உலகம் முழுவதும் தமிழர்கள் வாழும் நாடுகளுக்கு கொண்டு சேர்ப்பதே ஆகும்