கத்தார் பரிசளித்த விமானத்தை ஏற்றுக் கொண்ட அமெரிக்கா..!!!

கத்தார் பரிசளித்த விமானத்தை ஏற்றுக் கொண்ட அமெரிக்கா..!!!

கத்தார் ஜனாதிபதி டோனல்ட் டிரம்பிற்கு பரிசளித்த போயிங் 747 விமானத்தை ஏற்றுக்கொண்டதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.

அரசாங்க விதிமுறைகளின்படி அந்த விமானம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அது கூறியது.

அந்த விமானத்தில் உரிய பாதுகாப்பு அம்சங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்ட பிறகு,திரு. டிரம்பின் அதிகாரப்பூர்வ பயணங்களுக்குப் பயன்படுத்தப்படும் என்று செய்தித் தொடர்பாளர் சியான் பார்னெல் தெரிவித்தார்.

திரு.டிரம்ப்பின் சமீபத்திய மத்திய கிழக்கு பயணத்தின் போது கத்தார் இந்த விமானத்தை அவருக்கு பரிசாக வழங்கியது.

பொதுமக்களிடமிருந்தும் இராணுவத்தினரிடமிருந்தும் நூறு மில்லியன் டாலர்களுக்கு மேல் புதிய விமானத்தை வாங்குவதற்குப் பதிலாக, ஒன்றை இலவசமாகப் பெறலாம் என்று திரு. டிரம்ப் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

ஆனால் வெளிநாடுகளிலிருந்து பரிசுகளை ஏற்றுக்கொள்வது அமெரிக்க சட்டத்திற்கு எதிரானது என்ற கவலைகள் எழுந்துள்ளன.

மேலும் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்ய விமானத்தை மறுசீரமைக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.