ஆர்ச்சர்ட் டவர்ஸ் கொலை வழக்கு தொடர்பான மேல்முறையீடு நிராகரிப்பு…!!

ஆர்ச்சர்ட் டவர்ஸ் கொலை வழக்கு தொடர்பான மேல்முறையீடு நிராகரிப்பு...!!

ஆர்ச்சர்ட் டவர்ஸ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரின் மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் கடந்த ஜூலை 2019 இல் நடந்தது.

சண்டையின் போது, ​​31 வயதான சதீஷ் நோவல் கோபிதாஸ் கழுத்தில் ஏற்பட்ட கத்திக்குத்து காயத்தால் இறந்தார். 

குற்றம் சாட்டப்பட்ட 33 வயதான டான் சென் யாங் கத்தியால் திரு.சதீஷை 3 முறை குத்தியதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு நடந்த விசாரணையின் முடிவில், டானுக்கு ஆயுள் தண்டனையும் 12 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன. 

டானின் வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்றத்தில், அவர் தவறுதலாக திரு. சதீஷின் கழுத்தில் குத்தியதாகத் தெரிவித்தார்.

திரு. சதீஷைக் கொல்லும் நோக்கத்துடன் டான் அவரைத் தாக்கவில்லை.எனவே, கொலைக் குற்றச்சாட்டிலிருந்து அவரை விடுவிக்க வழக்கறிஞர்கள் மேல்முறையீடு செய்தனர்.

ஆனால், ஒரு நபரின் தலையில் கத்தியால் தாக்குவது கடுமையான காயங்களை ஏற்படுத்தும் என்று நீதிபதி சுட்டிக்காட்டினார்.

அதன் அடிப்படையில் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்வதாக அவர் தீர்ப்பளித்தார்.