வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் கவனத்திற்கு! Part-5
நாம் இந்தத் தொகுப்பில் வெளிநாடு சரியான முறையில் ஏமாறாமலும் நல்லபடியாக எப்படி செல்வது என்று தொடர்ச்சியாக நான்கு பாகங்களை பார்த்து பார்த்து வருகிறோம். அதை படிக்காதவர்கள் தயவு செய்து அதை படித்துவிட்டு,தெளிவாகத் தெரிந்து கொண்டு,நீங்கள் வெளிநாட்டுக்கு முயற்சி செய்தீர்கள் என்றால் உங்களை யாராலும் ஏமாற்ற முடியாது.நீங்கள் நல்லபடியாக வெளிநாடு சென்று விடுவீர்கள்.
அந்த நாலு பாகத்தின் லிங்கையும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதை படித்துவிட்டு பிறகு இந்த ஐந்தாவது பாகத்தை படிக்கவும்.
நம்முடைய கடைசிப் பதிவில் ஒரு சில ஏஜெண்டுகளிடம் நீங்கள் சிக்கிக் கொண்டீர்கள் என்றால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது அது யார் என்று அடுத்த பதிவில் பார்ப்பதாக சொல்லி இருந்தோம்.
இந்தப் பதிவில் அதன் தொடர்ச்சியை காணலாம். நீங்கள் வெளிநாடு செல்லும் பொழுது ஒரு சில ஏஜெண்டுகள் உங்களை வெளிநாட்டிற்கு அனுப்பாமலே ஏமாற்றுவார்கள்.அவர்கள் எப்படி ஏமாற்றுவார்கள் என்றால்
ஒரு சில ஏஜெண்டுகள் உங்களுக்கு தகுந்த வேலை இருப்பதாகவும். அதிக சம்பளத்தில் வேலை இருப்பதாகவும். உங்களிடம் ஆசை வார்த்தை சொல்லி உங்களுக்கு பிடித்த வேலையை வாங்கித் தருவதாக சொல்லி உங்களிடம் மிகப்பெரிய தொகையை முன் பணமாக வாங்குவார்கள்.
நீங்கள் பணம் செலுத்திய பிறகு உங்கள் வேலையில் எந்தவித முன்னேற்றமும் இருக்காது அவர்களிடமிருந்து நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் மட்டுமே வரும் அடுத்த வாரத்தில் வேலை வாங்கித் தருகிறேன் அடுத்த மாதத்தில் வேலை கிடைத்து விடும் என்று பொய் மட்டுமே சொல்லிக் கொண்டிருப்பார்கள்.
ஒரு கட்டத்திற்கு மேல் நீங்கள் பொறுமை இழந்து அவர்களிடம் பணத்தை திருப்பித் தருமாறு கேட்பீர்கள் அப்பொழுது இழுத்து அடித்து உங்கள் பணத்தை திருப்பிக் கொடுத்து விடுவார்கள் அந்த இரண்டு அல்லது மூன்று மாதம் உங்கள் பணத்தை அவர்கள் நன்றாக பயன்படுத்திவிட்டு பிறகு திருப்பி கொடுத்துவிடுவார்கள் இது ஏமாற்றுவதில் ஒருவகை.
இதில் போல ஏஜென்ட்கள் வட மாநிலத்தில் இருந்தோ அல்லது வேறு நகரங்களில் இருந்தோ உங்களை தொடர்பு கொண்டு உங்களுடைய வேலை தேவையை இணையதளத்தில் பார்த்தோம் நீங்கள் பதிவேற்றம் செய்து இருந்தீர்கள் அதன் மூலமாக உங்களை தொடர்பு கொள்கிறோம் என்று கூறுவார்கள்.
நீங்கள் தொடர்ந்து பேசும் பொழுது உங்களுக்கு வேலை தயாராக உள்ளது போல் சொல்லி உங்களிடம் பணம் வாங்க ஆரம்பிப்பார்கள் நீங்கள் பணம் செலுத்த செலுத்த அவர்கள் பல காரணங்களை சொல்லி உங்களிடம் பணத்தை கரப்பார்கள் பொறுமை இழந்து நீங்கள் பணத்தை திருப்பி கேட்டால் அவர்கள் போனை அணைத்துவிட்டு தலை மறைவு ஆகிவிடுவார்கள்.
3. இலவச வேலை வாய்ப்பு! இதுபோன்று சொல்பவர்கள் உங்களை தொடர்பு கொண்டு நீங்கள் எதுவும் பணம் செலுத்த தேவையில்லை என்றும் சிங்கப்பூர் சென்றவுடன் நாங்கள் உங்கள் சம்பளத்தில் பிடித்துக் கொள்கிறோம். என்று சொல்வார்கள்.
அதன் பின்னர் உங்களிடமிருந்து ஆயிரம் இரண்டாயிரம் என்று டாக்குமெண்ட் செலவு மற்றும் கொரியர் செலவு என்று கொஞ்சம் கொஞ்சமாக வாங்க ஆரம்பிப்பார்கள் இது சில ஆயிரங்களை தாண்டியவுடன் நீங்கள் கேள்வி கேட்டால் தலைமறைவாகி விடுவார்கள்.
4. மருத்துவ பரிசோதனை திருடர்கள்! தமிழ்நாட்டில் இதற்கென்று ஒரு போலி ஏஜென்ட் குழு உள்ளது. இவர்கள் என்ன செய்வார்கள் என்றால், உங்களுக்கு வேலை இலவசமாக கிடைக்கும் என்று சொல்லி மருத்துவ பரிசோதனை மட்டும் செய்யுங்கள் என்று சொல்வார்கள்.ஆனால் அந்த மருத்துவ பரிசோதனையை அவர்கள் சொல்லும் இடத்தில் தான் செய்ய வேண்டும் என்று கூறுவார்கள். அதற்காக அவர்கள் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மருத்துவ பரிசோதனை மையம் போன்று வைத்திருப்பார்கள். அங்கு சென்று நீங்கள் மருத்துவ பரிசோதனை செய்தீர்கள் என்றால் 6000 முதல் 10000 வரை கேட்பார்கள் அதன் பிறகு மூன்று மாதத்தில் உங்களை தொடர்பு கொள்கிறோம் என்று சொல்லி காணாமல் போய்விடுவார்கள்.
இது போன்ற ஏஜெண்டுகளை நீங்கள் தேர்வு செய்தால் உங்கள் வாழ்க்கை அழிவது நிச்சயம்.
நமது அடுத்த பதிவில் உங்கள் வேலையை தேர்வு செய்யும் பொழுது நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னென்ன என்று பார்க்கலாம்.