வெளிநாடு செல்பவர்கள் கவனத்திற்கு…. Part -3

வெளிநாடு செல்பவர்கள் கவனத்திற்கு.... Part -3

வெளிநாடு செல்பவர்கள் கவனத்திற்கு…. Part -3

நாம் தினந்தோறும் தொடர்ந்து வெளிநாட்டு வேலைக்கு சரியான முறையில் செல்வது எப்படி? என்று தொடர்ந்து பார்த்து வருகிறோம்.

இந்த பதிவை நீங்கள் முழுமையாக படிப்பதன் மூலம் சரியான முறையில் சரியான வேலைக்கு ஏமாறாமல் நல்லபடியாக வெளிநாடு செல்ல முடியும்.

இதற்கு முன் நாம் இப்பதிவின் இரண்டு பாகங்களை வெளியிட்டுள்ளோம். அதனுடைய லிங்கை இங்கே கொடுக்கிறோம். படிக்காதவர்கள் நிச்சயம் படித்துவிட்டு வாருங்கள்.

அதன் தொடர்ச்சியாக இன்று அதன் மூன்றாவது பாகத்தை பார்க்கலாம்.

நாம் வெளிநாடு செல்வதற்கான முடிவை எடுத்த பிறகு முதலில் எந்த நாட்டிற்கு செல்ல வேண்டும் என்ற முடிவை சரியாக எடுக்க வேண்டும்.

நான் எந்த நாட்டிற்கு செல்ல வேண்டும் என்ற தேர்வு நம்முடையதாக இருக்க வேண்டும்.

ஒரு சிலர் ஏஜென்ட்கள் பேச்சைக் கேட்டு அவர்கள் சொல்லும் நாட்டிற்கு செல்கின்றனர். நீங்கள் அவ்வாறு செய்யாதீர்கள்.

ஏனென்றால் ஒவ்வொரு நாட்டிற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. ஓர் உதாரணமாக நீங்கள் அரபு நாட்டிற்கு செல்கிறீர்கள், என்றால் அங்கு வெப்பம் அதிகமாக இருக்கும்.சம்பளம் குறைவாக இருக்கும். ஒரு சிலருக்கு வெப்பத்தை தாங்க முடியாது.இது ஏஜென்ட்டுக்கு தெரியாது.எனவே நீங்கள் அங்கு சென்றீர்கள் என்றால், உங்கள் உடல் வேலை செய்ய ஒத்துழைக்காது. எனவே நீங்கள் இழப்புடன் திரும்பி வர வேண்டியதாக இருக்கும்.

ஒரு சிலர் குளிர் அதிகமாக இருக்க நாட்டிற்கு செல்வார்கள்.அங்கு உங்கள் உடல் குளிரை தாங்கிக் கொள்ளாது.எனவே இழப்புடன் நீங்கள் திரும்ப வேண்டியதாக இருக்கும்.

எனவே நீங்கள் வெளிநாடு செல்ல முடிவு செய்த பின், எந்த நாடு உங்களுக்கு உகந்ததாக உள்ளதோ,அந்த நாட்டிற்கு செல்வது சிறந்தது.

அடுத்ததாக நீங்கள் சரியான ஏஜென்டை தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஏஜென்டை தேர்ந்தெடுப்பது என்பது உங்கள் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பதற்கு சமம். ஏனென்றால் உங்கள் எதிர்காலத்தை அவர்கள் கையில் தான் நீங்கள் ஒப்படைக்கிறீர்கள்.

உங்களுக்கு ஏஜென்ட் சரியாக அமைந்து விட்டால்,அதன் பிறகு உங்களுக்கு வேறு எதுவுமே தேவையில்லை. நிச்சயமாக உங்கள் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம். சரியாக அமையவில்லை என்றால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது.

ஏஜென்டை தேர்வு செய்யும் போது நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய பல முக்கியமானவை உள்ளது. அவை என்னென்ன என்று நாம் நம்முடைய அடுத்த பதிவில் பார்க்கலாம்.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan