வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் கவனத்திற்கு Part-6

வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் கவனத்திற்கு Part-6

வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் கவனத்திற்கு Part-6

நான் இந்த தொகுப்பில் வெளிநாடு சரியான முறையில் செல்வது எப்படி என்று தொடர்ச்சியாக பார்த்து வருகிறோம்.

இந்தப் பதிவை முதல் பாகத்தில் இருந்து நீங்கள் தொடர்ந்து படித்து வந்தீர்கள் என்றால், உங்களை யாராலும் ஏமாற்ற முடியாது. நீங்கள் நல்லபடியாக வெளிநாடு சென்று உங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்.

நமது கடைசி பாகத்தில் எப்படி எல்லாம் வெளிநாடு செல்பவர்களை ஏமாற்றுவார்கள் என்று பார்த்தோம் இந்த பகுதியில் வெளிநாட்டு வேலையை தேர்வு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

1, வேலை கஷ்டம்!

நீங்கள் வெளிநாட்டு வேலைக்குச் செல்லும் பொழுது நீங்கள் இரண்டு விதமான வேலை பிரச்சனைகளை சந்திப்பீர்கள் ஒன்று நீங்கள் உடல் உழைப்பு அதிகமாக கொடுக்க வேண்டியது இருக்கும் மற்றொன்று உங்கள் மூளையை அதிகம் பயன்படுத்த வேண்டியது வரும் இந்த இரண்டுமே உங்களுக்கு சோர்வை மட்டுமே ஏற்படுத்தும்.

நீங்கள் வெளிநாடு சென்று கஷ்டப்பட தயாராக இல்லை என்றால் தயவு செய்து செல்ல வேண்டாம் உங்கள் பணம் நிச்சயமாக வீணாகிவிடும்.

2, வேலை தேர்வு!

நீங்கள் வெளிநாடு செல்லும் பொழுது உங்கள் வேலையை சரியான முறையில் தேர்வு செய்தீர்கள் என்றால் நிச்சயம் வெற்றி நிச்சயம்.

நீங்கள் வெளிநாட்டு வேலையை தேர்வு செய்யும் பொழுது உங்களுக்கு ஏதாவது ஒரு தொழில் அனுபவம் இருந்தால் அந்த வேலையை தேர்வு செய்வது மிக மிக சிறந்தது.

ஏனென்றால் நீங்கள் வேலையை தேர்வு செய்யும் பொழுது உங்களுக்கு தெரியாத வேலையை தேர்வு செய்தால் அது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் அல்லது அந்த வேலையை உங்களால் கற்றுக் கொள்ள முடியவில்லை என்றாலோ நீங்கள் வெளிநாட்டில் இருக்க முடியாது.

உங்களுக்குத் தெரிந்த வேலை என்றால் நிச்சயமாக அந்த வேலை உங்களுக்கு பிடித்த வேலையாக இருக்கும் நீங்களும் நீண்ட நாட்கள் வெளிநாட்டில் இருக்க முடியும்.

உங்களுக்கு அனுபவம் உள்ள வேலை என்றால் உங்களுக்கு சம்பளமும் அதிகமாக கிடைக்க வாய்ப்புகள் அதிகம்.

3. வேலை தேர்வில் ஏஜெண்டை நம்ப வேண்டாம்!
நீங்கள் வெளிநாடு செல்லும் பொழுது வேலையை தேர்வு செய்ய ஏஜெண்டுகளை நம்ப வேண்டாம் ஏனென்றால் அவர்கள் தற்பொழுது எந்த வேலைக்கு அதிக வாய்ப்புகள் உள்ளதோ அந்த வேலையில் உங்களை திணிக்க பார்ப்பார்கள். அப்படி திணிக்கும் பொழுது உங்களுக்கு அந்த வேலை தெரியவில்லை என்றால் மேலே குறிப்பிட்டது தான் நடக்கும்.

நீங்கள் அவசரப்படாமல் பொறுமையாக உங்களுக்கு பிடித்த வேலையை தேர்வு செய்து செல்வது சிறந்தது.

4. அனுபவம் இல்லை என்றால்!
ஒருவேளை உங்களுக்கு அனுபவம் இல்லை என்றால் அதை உங்கள் கம்பெனியிடம் தெளிவாக சொல்லி விடுங்கள் ஏஜென்ட் பொய் சொல்லச் சொன்னால் சொல்லாதீர்கள் ஏனென்றால் வேலை தெரியவில்லை என்றால் கம்பெனி உங்களை திருப்பி அனுப்பி விடுவார்கள்.

வேலையில் முன்ன அனுபவம் இல்லை என்றால் ஒரு சில கம்பெனிகள் தமிழ்நாட்டில் உங்களுக்கான பயிற்சியை வழங்கி எடுத்துக் கொள்வார்கள்.

இது போன்று உங்களுக்கு பயிற்சி தேவைப்பட்டால் இந்த தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும் 8124738010
7550207508
8754396756

5. சம்பளம்!

நீங்கள் வேலைக்கு செல்லும் பொழுது உங்கள் சம்பளத்தை தெளிவாக பேசிக்கொள்ளுங்கள் அது எட்டு மணி நேரத்திற்காய் இல்லை 12 மணி நேரத்திற்கு ஒருவேளை உங்களுக்கு ஓவர் டைம் இருந்தால் அதற்கு எவ்வளவு தொகை என்று அனைத்தையும் தெளிவாக பேசிக் கொள்ளுங்கள்.

நமது அடுத்த பதிவில் ஏஜென்டிடம் எவ்வாறு பணம் செலுத்த வேண்டும் என்பதை பார்க்கலாம்.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan