இந்தியாவிலும் இனி தானியங்கி வாகனங்கள்! 12/07/2025 / sgtamilan, singapore, singapore news Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link இந்தியாவிலும் இனி தானியங்கி வாகனங்கள்! அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம் தனது முதல் விற்பனையகத்தை மும்பையில் வரும் ஜூலை 15ஆம் தேதி திறக்க உள்ளது.மும்பையில் வர்த்தக வட்டாரத்தில் உள்ள பண்ட்ர குர்லா கட்டடத்தில் விற்பனையகம் திறக்கப்பட உள்ளது.கிட்டத்தட்ட ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள கார்களையும் விற்பனை பொருட்களையும் இறக்குமதி செய்துள்ளது அந்த நிறுவனம். உலகில் கார்களுக்கு மூன்றாவது ஆகப்பெரிய சந்தையாக இந்தியா திகழ்வது குறிப்பிடத்தக்கது.மற்ற நாடுகளில் தனது உற்பத்தி திறன் குறைந்து வருவதாலும் மற்றும் விற்பனை குறைந்து வருவதாலும் இந்தியாவில் கார் விற்கும் முடிவை எடுத்துள்ளது டெஸ்லா.ஆனால் நீங்கள் இந்த காரை வாங்க வேண்டுமென்றால் கிட்டதட்ட 70% இறக்குமதி வரியை செலுத்த வேண்டியது இருக்கும். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E Pass இல் வேலை வாய்ப்பு!! ஏற்கனவே இந்தியாவின் இறக்குமதி வரியை பற்றி டெஸ்ட்லா உரிமையாளர் இலோன் மஸ்க் குறை கூறியுள்ளார்.இருந்த போதும் அந்நிறுவனத்தை இந்தியாவில் கொண்டு வருவதற்கு பிரதமர் நரேந்திர மோடி பல்லாண்டுகளாக முயற்சி செய்து வந்தார்.மின் வாகனங்களை தயாரிக்கும் டெஸ்லா நிறுவனத்தை இந்தியாவிலேயே தயாரிக்கும் படி செய்வது பிரதமர் நரேந்திர மோடியின் நோக்கமாக இருந்து வருகிறது. 2024 இல் இந்தியாவில் மின்சார வாகன முதலீட்டை திரு மஸ்க் அறிவிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்த பயணம் கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டது.ஆனால் இந்தியாவில் தற்பொழுது கார் உற்பத்தி செய்வதில் ஆர்வம் காட்டவில்லை என்று டெஸ்லா தெரிவித்தது.இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் தொடங்குவது அமெரிக்க அதிபருக்கு பிடிக்கவில்லை என்று சில தரப்பினர் கூறுகின்றனர்.Follow us on : click here WHATSAPP CHANNEL LINK https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan CLICK HERE 👉👉 சிங்கப்பூரில் E Pass இல் வேலை வாய்ப்பு!!