இங்கிலாந்தில் லிவர்பூல் அணி ரசிகர்கள் மீது மோதிய கார்..!!!47 பேர் காயம்..!!! 27/05/2025 / England, sgtamilan, sportsnews, worldnews Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link இங்கிலாந்தில் லிவர்பூல் அணி ரசிகர்கள் மீது மோதிய கார்..!!!47 பேர் காயம்..!!! இங்கிலாந்தில் இங்கிலிஷ் பிரீமியர் லீக் காற்பந்து வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருந்த லிவர்பூல் அணி ரசிகர்கள் மீது கார் மோதியது.அந்தக் காரை ஓட்டியதாக சந்தேகிக்கப்படும் 53 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவத்தில் 47 பேர் காயமடைந்தனர்.27 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஒரு குழந்தை மற்றும் ஒரு பெரியவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக அவசர மருத்துவச் சேவைகள் தெரிவித்தன.லிவர்பூல் அணி இங்கிலீஷ் பிரீமியர் லீக் பட்டத்தை வென்றது. 4 வது முறையாக Golden Boot ஐ வென்றுள்ள வீரர்!! லிவர்பூல் அணியின் வீரர்கள் வெற்றியைக் கொண்டாடுவதைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியிருந்தனர்.இந்த சம்பவம் ஒரு தனிப்பட்ட சம்பவம் என்றும், பயங்கரவாதமாக வகைப்படுத்தப்படவில்லை என்றும் பிரிட்டிஷ் காவல்துறை தெரிவித்துள்ளது.இது சம்பந்தமான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. Follow us on : click here Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan