2030 ஆம் ஆண்டின் காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடக்க உள்ளது.
இந்த போட்டியை ஏற்று நடத்த இந்தியா விண்ணப்பித்துள்ளது.
நேற்று (ஆகஸ்ட் 29) விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டதாக இந்திய ஒலிம்பிக் சங்கம் (IOA) தெரிவித்துள்ளது.
2036 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான தகுதியை வலுப்படுத்த இந்தியாவிற்கு இது உதவும்.
“விளையாட்டு போட்டியை நடத்துவதற்கான விண்ணப்பம் அல்ல விளையாட்டு வீரர்களை மையமாகக் கொண்ட அனைவரையும் உள்ளடக்கி எதிர்காலத்தை நோக்கிய விளையாட்டு போட்டிகளை நடத்த நாம் கடமை கொண்டுள்ளோம் என்பதை காட்டுகிறது” என்று சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் சொன்னார்.