சிங்கப்பூருக்கு இந்த ஆண்டில் குடிப்பெயரும் பணக்காரர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று தெரியுமா?
குடிப்பெயர்ப்பு முதலீட்டாளர் ஆலோசனை நிறுவனமான ஹென்லி & பார்ட்னர்ஸ் சிங்கப்பூருக்கு இந்த ஆண்டு ஏறக்குறைய 1600 கோடீஸ்வரர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கலாம் என்று கூறியுள்ளது.
இந்த ஆண்டு முன்னுரைக்கப்பட்ட எண்ணிக்கையில் இது பாதி என்றும் குறிப்பிட்டது.
கடந்த 2024 ஆம் ஆண்டில் தோராயமாக 3500 கோடீஸ்வரர்கள் சிங்கப்பூருக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
2025 ஆம் ஆண்டு அறிக்கையின் படி உலகம் முழுவதும் ஒரு லட்சத்து 42 ஆயிரம் செல்வந்தர்கள் ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு குடிப் பெயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக செல்வந்தர்கள் அதிகம் விரும்பும் இடங்கள் சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, கனடா நியூசிலாந்து ஆகிய நாடுகள் முக்கியபங்கு வகிக்கின்றன.
சீனா, வியட்நாம், தென்கொரியா ஆகிய நாடுகளில் உள்ள செல்வந்தர்கள் தாய்லாந்தையே விரும்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் சிங்கப்பூரின் நிலையான அரசியல் சூழல், சீரான நிதித்துறை, கவர்ச்சியான வரி கொள்கைகள், உயர்தரமான வாழ்க்கை முறை ஆகியவை நிச்சயமற்ற உலகின் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும் என்று கூறுகின்றனர்.