சிங்கப்பூரர்கள் ஒவ்வொரு ஆண்டும் டுரியான் சுற்றுப்பயணத்தை மேற்கொள்வது வழக்கம்.
இந்த ஆண்டு இப்பொழுது டுரியான் சுற்றுப்பயணம் தொடங்கிவிட்டது.
பொதுத் தேர்தலுக்குப் பிறகு இந்த ஆண்டு 30 விழுக்காடு இது அதிகரித்துள்ளது,என்று ஜோகூர் பயண வழிகாட்டிகளில் சங்கத் தலைவர் தெரிவித்தார்.
டுரியான் பலத்தை ருசிப்பதற்காக ஜோகூர் பாருக்கு ஜொகூர் பாலத்தை தாண்டி மக்கள் செல்கின்றனர்.
சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தலில் ஆதரவளித்த தங்களுடைய சமூகத்திற்கும் கட்சி உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக அவர்களை துரியான் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்வது பிரபலமான வழியாக இருக்கிறது என்று திரு லியோங் கூறினார்.
ஒவ்வொரு குழுவிலும் எட்டிலிருந்து பத்து பேர் வரை இருப்பார்கள் என்றார் அவர்.
உதாரணமாக ஜாலான் காயு நாடாளுமன்ற உறுப்பினரான இங் சீ மெங் அண்மையில் ஜொகூருக்கு சுற்றுலா செல்லும் ஒரு அறிவிப்பை பேஸ்புக்கில் வெளியிட்டு இருந்தார்.
ஒரு நாள் சுற்றுப்பயணத்திற்கு கட்டணமாக 110 வெள்ளி அதில் போக்குவரத்து மற்றும் முசாங் கிங் டுரியான் மதிய விருந்து எட்டு வகையான இரவு உணவு போன்றவற்றை உள்ளடக்கி இருந்தது.