சிங்கப்பூர்:பெடோக் HDB குடியிருப்பில் தீவிபத்து..!! 35 பேர் வெளியேற்றம்...!!
சிங்கப்பூர்: பெடோக்கில் உள்ள சாய் சீ தெருவின் பிளாக் 52-ல் இன்று (ஜூலை 13) காலை 8 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது.
இதனால் 13வது மாடியில் லிஃப்டுக்கு வெளியே இருந்த வீட்டுப் பொருட்கள் தீப்பற்றி எரிந்தன.
இச்சம்பவம் குறித்து சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படை (SCDF) கூறுகையில், அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது தீ விபத்தானது மிக கடுமையான நிலையில் இருந்ததாகவும், உடனடியாக தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தியதாகவும் கூறப்பட்டது.
தீவிபத்துக்கான காரணம் தற்போது விசாரணையில் உள்ளதாக SCDF தெரிவித்துள்ளது.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் சிவில் பாதுகாப்புப் படை பொதுமக்களுக்கு லிஃப்ட், படிக்கட்டி, நடைபாதை போன்ற பொது இடங்களில் குப்பைகள் குவிவதை தவிர்த்து சுத்தமாக வைத்திருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.