சிங்கப்பூரில் நான்கு பேருக்கு சிறை!! என்ன காரணம்? அப்படி என்ன செய்தார்கள்!! தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்…..

சிங்கப்பூரில் நான்கு பேருக்கு சிறை!! என்ன காரணம்? அப்படி என்ன செய்தார்கள்!! தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்.....

சிங்கப்பூரில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் இவ்வாண்டு பிப்ரவரி மாதம் வரை வேலையிட விபத்துகள் தொடர்பாக வேலையிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதார சட்டத்தை மீறியதற்காக 4 பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நான்கு பேருக்கும் நான்கு மாதங்கள் இரண்டு வாரங்கள் முதல் ஏழு மாதங்கள் இரண்டு வாரங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இந்த தகவல் மனிதவள அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நால்வரில் இயந்திர பராமரிப்பு நிறுவனமான சன் பவர் எக்யூப்மென்ட்ஸின் இயக்குனரான ஓங் போக் வாங்,ஏப்ரல் 2023 ஆம் ஆண்டில் வேலை பாதுகாப்பு நடவடிக்கைகளை நிறுவ தவறியதற்காகவும்,ஊழியர்களுக்கு போதுமான வழிமுறைகளை வழங்க தவறியதற்காகவும் மிக நீண்ட தண்டனையைப் பெற்றுள்ளார்.இதன் விளைவாக போர்க்லிப்ட்டை அகற்றும்போது போர்க்லிப்ட் மாஸ்ட் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.

மற்ற இருவர் ஜூலை 10 ஆம் தேதி 2023 அன்று நடந்த வேலையிட விபத்து தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டனர்.அவர்களில் சூப்பர்வைசர் ஒருவருக்கு ஐந்து மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்குகள் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதன் காரணமாக ஏற்பட்ட விளைவுகளை எடுத்து காட்டுகின்றன.அதிலும் குறிப்பாக உயரத்தில் வேலை செய்வது ,கனரக வாகனங்களை இயக்குவது போன்ற அதிக ஆபத்துகளைக் கொண்ட வேலைகளில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

தங்களின் பாதுகாப்பு பொறுப்புகளை நிறைவேற்றாமல் தவறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan