சிங்கப்பூரில் பாட்டி வீட்டிற்கு தீ வைத்த பேரன்!! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!
சிங்கப்பூரைச் சேர்ந்த 27 வயது லெனார்ட் டான் யொங் ஜியா கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி தனது பாட்டியை ஆறு முறை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார்.ஆனால் பாட்டி தொலைபேசியை எடுக்கவில்லை என்பதால்
அவர் நேரடியாக பாட்டி வீட்டிற்கு சென்று வெளிக் கதவை திறக்கச் சொல்லி சத்தமிட்டுள்ளார்.ஆனால் பாட்டி திறக்கவில்லை.
பாட்டி வீட்டில் இருந்ததை உணர்ந்த டான் கோபத்தில் அட்டைப்பெட்டிக்கு தீ வைத்து அதனை வீட்டில் மரக்கதவுக்கும் உலோக வெளிக் கதவுக்கும், இடையே இருந்த பகுதியில் விட்டுச் சென்றார்.
ஏற்கனவே அங்கு மற்றொரு அட்டைப்பெட்டி இருந்ததால் தீ பலமாக எரியத் தொடங்கி உள்ளது.