கோடை வெயிலின் தாக்கத்திலிருந்துதலைமுடியை பாதுகாக்கும் ஹோம்மேட் ஹேர் மாஸ்க்…!!!

கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து தலைமுடியை பாதுகாக்கும் ஹோம் மேட் ஹேர் மாஸ்க்...!!!

கோடை காலம் வந்துவிட்டால், எல்லோரும் தங்கள் சருமத்திற்கு அதிக அக்கறை காட்டுவார்கள்.
சூரிய ஒளியால் சருமம் சேதமடைவது போல, தலைமுடியும் சேதமடையும். இதனால் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பாதுகாக்கவும், அதற்கு சரியான பராமரிப்பு அளிக்க வேண்டியது அவசியம்.

மேலும் கோடை காலத்தில் ஏற்படக்கூடிய அதிக வியர்வை காரணமாக, தலையில் அதிக அழுக்குகள் படிந்து, பொடுகு மற்றும் முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதனால் சிலருக்கு வறண்ட கூந்தல் மற்றும் பிளவுபட்ட முனைகள் ஏற்படலாம்.

இதையெல்லாம் தவிர்க்க, உங்கள் தலைமுடிக்கு ஹேர் மாஸ்க்குகளைப் பயன்படுத்த வேண்டும். இப்போது கோடையில் முடி ஆரோக்கியத்தை பராமரிக்கும் சில கோடை ஹேர் மாஸ்க்குகளைப் பற்றி பார்ப்போம்.

💠 ஈரப்பதமூட்டும் ஹேர் மாஸ்க்

✨️ இந்த ஹேர் மாஸ்க்கிற்கு, ஒரு பழுத்த வாழைப்பழத்தை எடுத்து, அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து சாறு எடுக்கவும்.

✨️ பின்னர் அதனுடன் 2 தேக்கரண்டி தேன் மற்றும் 1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயை சேர்த்து நன்றாக கலக்கவும்.

✨️ பின்னர் அதை தலையில் தடவி 30-40 நிமிடங்கள் ஊற விடவும்.

✨️ அதன் பிறகு, லேசான ஷாம்பூவைப் பயன்படுத்தி தலைமுடியைக் கழுவவும்.

💠 ஆரோக்கியமான மற்றும் பட்டுப் போன்ற கூந்தலுக்கான ஹேர் மாஸ்க்

✨️ இந்த ஹேர் மாஸ்க்கிற்கு, 1 முட்டையை எடுத்து, ஒரு கிண்ணத்தில் உடைத்து நன்றாக கலக்கவும்.


✨️ பிறகு அதனுடன் 1/2 கப் தயிர் மற்றும் 2 தேக்கரண்டி பாதாம் எண்ணெயைச் சேர்க்கவும்.

✨️ பின்னர் அதை உங்கள் தலைமுடியில் தடவி 15-20 நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும்.

✨️ அதன் பிறகு, லேசான ஷாம்பூவைப் பயன்படுத்தி உங்கள் தலைமுடியைக் கழுவவும்.

✨️ இந்த ஹேர் மாஸ்க் உங்கள் தலைமுடிக்கு பளபளப்பைக் கொடுக்கும்.

💠 பொடுகுத் தொல்லையை போக்கும் ஹேர் மாஸ்க்

✨️ இந்த ஹேர் மாஸ்க்கிற்கு,3-4 டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை எடுத்து, தண்ணீரில் போட்டு, இரவு முழுவதும் ஊற வைக்கவும்.

✨️ மறுநாள் காலையில், ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து, 1 கப் தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும்.

✨️ பின்னர் அதை உங்கள் தலைமுடியில் தடவி 30 நிமிடங்கள் ஊற விடவும்.

✨️ அதன் பிறகு, லேசான ஷாம்பூவைப் பயன்படுத்தி உங்கள் தலைமுடியைக் கழுவவும்.

✨️ இந்த ஹேர் மாஸ்க்கை தொடர்ந்து தலைமுடிக்கு தடவி வந்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

💠 முடி வளர்ச்சியைத் தூண்டும் ஹேர் மாஸ்க்

✨️ இந்த ஹேர் மாஸ்க்கிற்கு, ஒரு கிண்ணத்தில் 3-4 தேக்கரண்டி கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொள்ளுங்கள்.

✨️ அதனுடன் 1 கப் தயிருடன் கலந்து பேஸ்ட் செய்யவும்.

✨️ பின்னர் அதை உங்கள் தலைமுடியில் தடவி 30-40 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

✨️ பின்னர் லேசான ஷாம்பூவைப் பயன்படுத்தி உங்கள் தலைமுடியைக் கழுவவும்.

✨️ இந்த ஹேர் மாஸ்க் பொடுகைப் போக்குவது மட்டுமல்லாமல் முடி வளர்ச்சியையும் தூண்டும்.