இண்டியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு தகுதி பெற்ற கார்லஸ் அல்கராஸ்..!!!
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இண்டியன் வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் அரையிறுதிப் போட்டிகள் நேற்று நடைபெற்றன.
தொடக்கத்திலிருந்தே ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய அல்கராஸ், பிரான்சிஸ்கோ செருண்டோலோவை 6-3, 7-6(7-4) என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
நாளை அரையிறுதியில் அல்கராஸ் பிரிட்டனின் கால் டிராப்பரை எதிர்கொள்கிறார்.