சிங்கப்பூரில் காப்பீட்டு வழக்கில் பரபரப்பு..!! பெண் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

சிங்கப்பூர் :சிங்கப்பூரில் மூளை இரத்த நாள வீக்கத்திற்காக அவசர அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண்ணின் $108,000-க்கும் அதிகமான காப்பீட்டு இழப்பீட்டுக் கோரிக்கையை நிராகரித்த விவகாரத்தில், புருடென்ஷியல் காப்பீட்டு நிறுவனத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் பெண்ணுக்கு சாதகமாக தீர்ப்பளிக்கவில்லை.
45 வயதான சாய் யான்ஹாங், தனது காப்பீட்டுக் கொள்கையில் இருந்ததாகக் கூறப்படும் “மறைக்கப்பட்ட நிபந்தனை” காரணமாகவே தனது மருத்துவச் செலவுகளுக்கான இழப்பீடு நிராகரிக்கப்பட்டதாக குற்றம் சாட்டி, புருடென்ஷியல் காப்பீட்டு நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார்.
CNA ஆசியாவின் தகவல்படி, 2023ஆம் ஆண்டு சாய் யான்ஹாங் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.
அவருக்கு மூளை இரத்தக்குழாய் வெடிப்பு காரணமாக பக்கவாதம் ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக அவசர சிகிச்சைக்காக தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு (NUH) கொண்டு செல்லப்பட்டார்.
மருத்துவமனையில் அவருக்கு மூளை இரத்த நாள வீக்கத்திற்காக எண்டோவாஸ்குலர் ரிப்பேர் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவர் மொத்தம் 21 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதில் 8 நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்றார்.
பின்னர் அவர் சிகிச்சைக்குப் பின் வெற்றிகரமாக குணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனது மருத்துவச் செலவுகளுக்காக காப்பீட்டு நிறுவனத்திடம் அவர் இழப்பீடு கோரினார்.
ஆனால், அந்தக் கோரிக்கையை புருடென்ஷியல் நிராகரித்தது.
காப்பீட்டுக் கொள்கையின் விதிமுறைகளின்படி, மூளை இரத்த நாள வீக்கத்திற்கான அறுவை சிகிச்சை இழப்பீட்டிற்கு மண்டை ஓட்டை திறக்கும் கிரானியோட்டமி அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும் என காப்பீட்டு நிறுவனம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
சாய்க்கு செய்யப்பட்டது எண்டோவாஸ்குலர் முறையிலான சிகிச்சை, அது கொள்கையின் குறிப்பிட்ட வரையறைக்குள் வரவில்லை எனக் கூறி $108,000-க்கும் அதிகமான கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இதனால் அதிருப்தியடைந்த சாய், தனது காப்பீட்டுக் கொள்கையில் மூளை இரத்த நாள வீக்கத்திற்கான காப்பீடு தொடர்பாக மண்டை ஓட்டுத் திறப்பு அறுவை சிகிச்சை அவசியம் எனக் குறிப்பிடும் ஒரு “மறைக்கப்பட்ட விதி” இருப்பதாகக் குற்றம் சாட்டினார்.
இந்த நிபந்தனை தனக்கு தெளிவாக தெரிவிக்கப்படவில்லை என்றும், அதன் காரணமாகவே தனக்குக் கிடைக்க வேண்டிய காப்பீட்டு இழப்பீடு மறுக்கப்பட்டதாகவும் அவர் வாதிட்டார்.
எனினும், அவரது வாதங்களை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.
சாயின் கோரிக்கைகள் காப்பீட்டு நிறுவனத்திற்கு எதிராக நியாயமான அடிப்படையை உருவாக்கவில்லை எனக் கண்டறிந்த நீதிமன்றம், அவருக்கு எதிராகத் தீர்ப்பளித்தது.
இந்த வழக்கு காப்பீட்டுக் கொள்கையில் இடம்பெறும் மருத்துவ சிகிச்சை வரையறைகள் மற்றும் நிபந்தனைகளை முழுமையாகப் புரிந்துகொள்வதன் முக்கியத்துவத்தை மீண்டும் எடுத்துக் காட்டியுள்ளது.
காப்பீடு எடுத்திருப்பது மட்டுமே போதுமானதல்ல எந்த வகையான சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் மற்றும் மருத்துவ நடைமுறைகளுக்கு இழப்பீடு வழங்கப்படும், அவற்றுக்கான குறிப்பிட்ட விதிமுறைகளையும் முன்கூட்டியே கவனமாகச் சரிபார்ப்பது அவசியம்.
Follow us on : click here
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
