“When life gives you tangerines” கொரியன் ட்ராமாவில் நடித்த நடிகர் சிங்கப்பூருக்கு வருகிறார்? எப்போது? தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்…

"When life gives you tangerines" கொரியன் ட்ராமாவில் நடித்த நடிகர் சிங்கப்பூருக்கு வருகிறார்? எப்போது? தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்...

“When life gives you tangerines” கொரியன் ட்ராமாவில் நடித்த நடிகர் சிங்கப்பூருக்கு வருகிறார்? எப்போது? தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்…

சிங்கப்பூருக்கு சமீபத்தில் வந்த தென்கொரிய நடிகரான பார்க் போ-கமை சந்திக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்த ரசிகர்களுக்கு தற்போது நற்செய்தி…..

“When life gives you tangerines” தொடரில் ஹீரோவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் தனிக்கென தனி இடத்தைப் பிடித்தவர் பார்க் போ-கம் தனது Be With You ரசிகர் சந்திப்பு சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக ஆகஸ்ட் மாதம் சிங்கப்பூருக்கு வருவார் என்று பார்க்கின் நிறுவனமான தி பிளாக் லேபிள் அறிவித்தது.

ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி மாலை 7 மணிக்கு தி ஸ்டார் தியேட்டரில் ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும்.ரசிகர்கள் பார்க்கை நேரில் சந்தித்து பேசலாம்.

டிக்கெட்டுகளின் விலை :

  • $148 முதல் $268 வரை (முன்பதிவு கட்டணம் தவிர).
  • Be With You பேக்கேஜ் வைத்திருப்பவர்களுக்கு கூடுதலாக பார்க்குடன் சேர்ந்து புகைப்படம் எடுப்பதற்கான வாய்ப்பும்,அவருடைய ஒரு autograph செய்யப்பட்ட அஞ்சலட்டையுடன் கூடிய அஞ்சலட்டைத் தொகுப்பும் கிடைக்கும் .

பொது டிக்கெட் விற்பனை ஜூன் 27 ஆம் தேதி காலை 10 மணிக்கு ticketmaster.sg பக்கத்திலும் மற்றும் +65 6018 7645 என்ற டிக்கெட் ஹாட்லைன் வாயிலாக தொடங்கும் .

மேலும் விவரங்களுக்கு லைவ் நேஷன் சமூக ஊடக சேனல்களில் தெரிந்து கொள்ளலாம்.

அண்மையில் பேக்சாங் சாலை விருதுகளில் பார்க் தனது கதாபாத்திரத்திற்காக சிறந்த தொலைக்காட்சி நடிகராக பரிந்துரைக்கப்பட்டார்.மேலும் “When life gives you tangerines” தொடரே விழாவில் சிறந்த நாடகத்திற்கான விருதை வென்றது.