சுமோ விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக முன்னணி வீரர் அறிவிப்பு!!

சுமோ விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக முன்னணி வீரர் அறிவிப்பு!!

சுமோ விளையாட்டின் முன்னணி வீரரும், ஜப்பானில் கிராண்ட் மாஸ்டர் என்ற பட்டத்தையும் வென்ற ஓர் வீரரான தெருனோஃபுஜி(Terunofuji) தனது ஓய்வு குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மங்கோலியாவில் பிறந்த அவர் 3 ஆண்டுகளாக சுமோ விளையாட்டின் முதல் நிலை வீரராக இருக்கிறார்.

சுமோ வரலாற்றிலேயே அந்த பெருமையைப் பெற்ற வீரர்களின் எண்ணிக்கை 73 என்று AFP செய்தி தெரிவித்தது.

14 வருடங்களாக இந்த விளையாட்டு துறையில் இருக்கும் அவர் இதுவரை 10 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.

அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக மிகவும் சிரமப்பட்ட அவர் அண்மையில் தோக்கியோவில் நடந்த போட்டியிலிருந்து விலகினார்.

மேலும் சுமோ போட்டியில் கலந்துகொள்ளும் அளவிற்கு உடலில் பலம் இல்லை என்றும் கூறியுள்ளார்.

தொடர்ந்து இளம் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப் போவதாகவும் அவர் கூறினார்.

Follow us on : click here ⏬

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilansg