விமான நிலையத்தில் துப்பாக்கி சுடப்பட்டது ஆடவர் கைது! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!
விமான நிலையத்தில் துப்பாக்கி சுடப்பட்டது ஆடவர் கைது! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!
ஆகஸ்ட் 13ஆம் தேதி காலை சிட்னி விமான நிலையத்தில் உள்நாட்டு விமான சேவை முனையத்தில் ஆடவர் ஒருவரை புடிக்க முயன்ற போது காவல்துறை அதிகாரிக்கச் சொந்தமான துப்பாக்கி சுடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதனால் அங்கு பதற்றம் நிலவியது.
ஆஸ்திரேலியாவில் உள்ள விமான நிலையங்களில் சிக்னி விமான நிலையம் ஆகா அதிகமான பயணிகளை கையாள்கிறது.
ஒரு ஆடவரை இரண்டு காவல்துறையினர் மடக்கி பிடிக்க அதிகாரி ஒருவர் தமது துப்பாக்கியை சோதித்துப் பார்ப்பதை காட்டும் காணொளி ஆஸ்திரேலியா ஊடகத்தால் வெளியிடப்பட்டது.
அதிகாரியிடம் இருந்து துப்பாக்கியை பறிக்க அந்த ஆடவர் முயன்ற போது துப்பாக்கி சுடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பான விசாரணை தொடங்கியுள்ளது குற்றம் நிகழ்ந்த இடம் அடையாளம் காணப்பட்டு விட்டது என்று காவல்துறை அதன் அறிக்கையில் குறிப்பிட்டது.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் பலத்த சத்தம் கேட்டதாகவும் உணவருந்தும் பகுதியில் இருந்து வெளியேறவும் அல்லது அதற்குள் செல்லவோ யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் கூறினர்.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை பொதுமக்களுக்கு ஆபத்து ஏதும் இல்லை என்று காவல்துறை கூறியது.
தற்பொழுது சிட்னி விமான நிலையம் வழக்க நிலைக்கு திரும்பி விட்டதாக தெரிவிக்கப்பட்டது.