Cup Cake நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்த மனிதவள அமைச்சகம்..!! காரணம் என்ன..??

Cup Cake நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்த மனிதவள அமைச்சகம்..!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் “ட்வெல்வ கப் கேக்ஸ்” என்ற நிறுவனத்திற்கு மனிதவள அமைச்சகம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.

80 ஊழியர்களின் ஊதியத்தை வழங்க தவறியதற்காக இந்த எச்சரிக்கையானது அறிவிக்கப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சகம் கூறியுள்ளது.

ட்வெல்வ் கப் கேக்ஸ் நிறுவனம் ஊதியமற்ற வேலை வாய்ப்பு மற்றும் சட்ட மீறல்கள் தொடர்பாக சென்ற ஆண்டு (2025)விசாரணைக் உள்ளாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்நிறுவனம் சென்ற ஆண்டு (2025) அக்டோபர் 29ஆம் தேதி அன்று மூடப்பட்டது.

12 கப் கேக்ஸ் இன் தலைமை நிறுவனமான, துன்சேரி வென்ச்சர்ஸ் லிமிடெட் கடுமையான பணப் பற்றாக்குறை காரணமாக, நிதிக் கடமைகளைத் தொடர்ந்து நிறைவேற்ற முடியாமல் நிறுவனத்தை கலைத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதனால் அக்டோபர் 1 முதல் 29ஆம் தேதி வரை பணிபுரிந்த 80 ஊழியர்களுக்கு சம்பளம் எதுவும் வழங்கவில்லை.இந்த சம்பளங்களானது நவம்பர் 7ஆம் தேதி அன்று வழங்கப்பட இருந்தது.

விசாரணையில் சம்பளத்தை தவிர்ப்பதற்கான ஒரு திட்டமிட்ட முயற்சியாக இல்லாமல்,நெருக்கடி காரணமாகவே இந்த வணிக நிறுவனம் மூடப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சகம் கூறியுள்ளது.

80 ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று மனிதவள அமைச்சகம் கடுமையான எச்சரிக்கையை தற்பொழுது நிறுவனத்தின் மீது விடுத்துள்ளது.

முதலாளிகள் தங்கள் தொழில்களை மூட வேண்டிய நிலை ஏற்பட்டால், அதை பொறுப்புடன் செய்ய வேண்டும். மேலும் வேலைவாய்ப்பு சட்டத்தின்படி முதலாளிகள் தங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கிய தீர வேண்டும் என்பது அவர்களின் கடமையாகும்.

நிறுவனத்தில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து, ஊழியர்களுக்கு முடிந்த வரை முன்கூட்டியேத் தெரிவித்திருக்க வேண்டும். அப்படி தெரிவித்தால் ஊழியர்கள் முன்கூட்டியே வேறு சில ஏற்பாடுகளையும் செய்து கொள்வதற்கு உதவியாக அது அமையும். ஊழியர்களுக்கு தெரிவிக்கவில்லை என்றால் கூட தொழிலாளர் சங்கத்திடம் கண்டிப்பாக தெரிவித்திருக்க வேண்டும்.

வேலை அளிக்கின்ற தொழில் நிறுவனங்கள் நிறுவனம் குறித்த பிரச்சனைகளை மனிதவள அமைச்சகத்திற்கும் கூற வேண்டும். அப்பொழுதுதான், வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி மையம், பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு அரசாங்க உதவி திட்டங்கள் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்க முடியும் என்று மனித வள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK