எண்ணெய் பசை சருமத்திற்கான இயற்கை ஃபேஸ் பேக்...!!

வெயில் காலம் வந்துவிட்டது.. சுட்டிருக்கும் வெயிலில் சிறிது நேரம் சென்றுவிட்டு வந்தாலே உடம்பெல்லாம் வியர்த்து விடும். முகமானது பொலிவிழந்து எண்ணெய் பசையாக காட்சியளிக்கும்.
முகத்தில் எண்ணெய் படிந்தால், அது சருமத்தின் துளைகளில் படிந்து, அவற்றை அடைத்து, பருக்களை ஏற்படுத்தும்.இந்தப் பருக்கள் மேலும் முகத்தில் அசிங்கமான வடுக்களை ஏற்படுத்தும். இந்தப் பிரச்சனைகள் அனைத்தையும் தவிர்க்க, சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பதை கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு, சருமத்திற்கு போதுமான பராமரிப்பு அளிக்க வேண்டும்.
எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்தும் ஃபேஸ் பேக்குகளை நீங்கள் பயன்படுத்தினால், உங்கள் முகத்தில் எண்ணெய் வழிவதைத் தடுக்கலாம். குறிப்பாக இயற்கை பொருட்களால் செய்யப்பட்ட ஃபேஸ் பேக்குகளைப் பயன்படுத்தும்போது, சரும செல்கள் ஆரோக்கியமாக இருக்கும். இப்போது எண்ணெய் பசை சருமத்திற்கான சில இயற்கை ஃபேஸ் பேக்குகளைப் பார்ப்போம்.
தயிர் ஃபேஸ் பேக்
✨️ இந்த ஃபேஸ் பேக்கிற்கு, ஒரு கிண்ணத்தில் 2-3 தேக்கரண்டி கெட்டியான தயிரை எடுத்துக் கொள்ளவும்.
✨️ பின்னர் அதை உங்கள் முகத்தில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து 15-20 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
✨️ பின்னர் உங்கள் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
✨️ இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி பயன்படுத்துவதன் மூலம், அதில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்தி, துளைகளை அவிழ்த்துவிடும்.இந்த ஃபேஸ் பேக் சருமத்தை பிரகாசமாக்கி ஈரப்பதமாக வைத்திருக்க உதவுகிறது.
மஞ்சள் மற்றும் எலுமிச்சை ஃபேஸ் பேக்
✨️ இந்த ஃபேஸ் பேக்கிற்கு, முதலில் ஒரு பாத்திரத்தில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூளை எடுத்து, அதில் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் ஆக எடுத்துக் கொள்ளவும்.
✨️ பின்னர் அதை முகத்தில் தடவி சிறிது நேரம் மெதுவாக மசாஜ் செய்து 5 நிமிடங்கள் ஆற வைத்து பின்னர் முகத்தை கழுவினால் முகம் பளிச்சென மாறும்.
ஓட்ஸ் மற்றும் தயிர் ஃபேஸ் பேக்
✨️ இந்த ஃபேஸ் பேக்கிற்கு, முதலில் ஒரு பாத்திரத்தில் 1 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பவுடரை எடுத்து அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு கலக்கவும்.
✨️ பின்னர் அதை முகத்தில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, 15 நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும்.
✨️ பின்னர் உங்கள் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவவும்.
✨️ இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள அனைத்து அழுக்குகளையும் நீக்கி, சருமத்தின் நிறத்தை மேம்படுத்தி, சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பதை தடுக்கிறது.
தயிர் மற்றும் முல்தானி மிட்டி ஃபேஸ் பேக்
✨️ இந்த ஃபேஸ் பேக்கிற்கு, முதலில் ஒரு பாத்திரத்தில் 2 டேபிள் ஸ்பூன் தயிர் எடுத்து அதில் 1 டீஸ்பூன் முல்தானி மெட்டி பவுடரைச் சேர்த்து, 2-3 சொட்டு டீ ட்ரீ ஆயிலைச் சேர்த்து பேஸ்ட் ஆக தயார் செய்து கொள்ளவும்.
✨️ பின்னர் அதை உங்கள் முகத்தில் தடவி 20 நிமிடங்கள் ஊர வைக்கவும்.
✨️ அதன் பிறகு, உங்கள் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவவும்.
✨️ உங்கள் முகத்தை பிரகாசமாகவும், பொலிவாகவும், பளபளப்பாகவும் மாற்ற வாரத்திற்கு இரண்டு முறை இந்த ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்தவும்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan