அப்படி போடு!! இதை எதிர்பார்க்கவே இல்லை.. 'குபேரா' படத்தின் புதிய தகவல்!!

தனுஷ் ஹீரோவாக நடித்து உருவாகியுள்ள குபேரா படத்தில் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படம் தமிழ், தெலுங்கு,ஹிந்தி,ஆகிய மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது.
இந்தப் படத்தின் டிரைலர் மும்பையில் நடந்த பிரம்மாண்டமான விழாவில் வெளியிடப்பட்டது.
குபேரா ட்ரெய்லரில் , தனுஷ் பிச்சைக்காரனாக தொடங்கி கோடீஸ்வரனாக உயரும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நாகர்ஜுனா ஒரு சக்தி வாய்ந்த காவல்துறை அதிகாரியாகவும் ராஷ்மிகா மந்தனா தனுசுக்கு ஜோடியாக கவர்ச்சியாக நடித்துள்ளார்.
தனுஷின் வசன உச்சரிப்பு ,மாறுபட்ட தோற்றமும் ரசிகர்களை கவர்ந்து உள்ளதாக கூறப்படுகிறது.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிகர்களுக்கு உணர்ச்சிகரமான அனுபவத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதலில் ஏப்ரல் 10,2025 அன்று வெளியாக திட்டமிடப்பட்டிருந்த இப்படம் VFX ,இசை மற்றும் எடிட்டிங் வேலைகளை மேலும் பிரமாண்டம் ஆக்குவதற்காக, அக்டோபர் 1,2025 அன்று வெளியாகும் என பட குழு அறிவித்துள்ளது.
Follow us on : click here
WHATSAPP CHANNEL LINK
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan
