சிங்கப்பூரில் தொழில்மாற்றத்துக்கான புதிய முன்னெடுப்பு!! 54 புதிய பாடநெறிகள் அறிமுகம்!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் தொழில்துறைகளில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை முன்னிட்டு, தொழில்மாற்றம் மற்றும் திறன் மேம்பாடு என்ற நோக்கத்துடன் 11 உள்ளூர் உயர்கல்வி நிறுவனங்கள் மொத்தமாக 54 புதிய படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளன.
இந்த புதிய படிப்புகள், SkillsFuture Career Transition Programme (TCTP) என்ற தலைப்பில், செயற்கை நுண்ணறிவு (AI), அதிவேக ஊடகம் (Advanced Media), சமையல் கலைகள் (Culinary Arts) உள்ளிட்ட வளர்ந்து வரும் துறைகளில் அதிகமாக தேவைப்படும் முக்கிய திறன்களை கற்றுத்தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஸ்கில்ஸ்ஃபியூச்சர் விழாவில், கல்விக்கான மூத்த துணை அமைச்சர் திரு. புட்ஜாரிம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் விரைவான வளர்ச்சியுடன், வயதுவந்த கல்வியாளர்களும் தங்கள் அறிவு மற்றும் பயிற்சி உள்ளடக்கம் தொழில்துறை வளர்ச்சிகளுடன் ஒத்துப்போவதை உறுதிசெய்ய தங்கள் திறன்களை தொடர்ந்து மேம்படுத்த வேண்டும் என்று கூறினார்.,
மேலும் அவர் கூறுகையில், “உயர்கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள் மற்றும் நிறுவன பயிற்சி மையங்கள் தொடர்கல்வி மற்றும் தொழில்மாற்றத்திற்கு உதவும் பயிற்சிகள் வழங்கும் கட்டமைப்பில் முக்கியப் பங்காற்ற வேண்டும்,” என்றும், இது நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்களுக்கு மறுசுழற்சி திறன்களை (reskilling) உருவாக்கும் ஒரு திட்டமாக அமையும் என்றும் தெரிவித்தார்.
இந்த புதிய பாடநெறிகள், பணிபுரியும் தொழிலாளர்கள் தங்கள் வலுவான அனுபவத்தைக் கொண்டு தொழிலை மாற்றவும், அதிகப்படியான சம்பள வாய்ப்புகள் உள்ள துறைகளில் செல்வதற்கும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாங்கள் பதிவிட்ட வேலை வாய்ப்பு தகவலை நன்கு படியுங்கள். இதை தவிர்த்து நீங்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு இன்டெர்வியூ நடைபெறும் போது தெரிவிக்கப்படும். எடுத்துக்காட்டாக கம்பெனி பெயர், விசா காலம்……
இது போன்ற வெளிநாட்டு,சிங்கப்பூர்வேலைக்குச் செல்ல விரும்புவோர்,“ SGTamilan ´´ இணைய பக்கத்தில் இணைந்திருங்கள்.
பின்குறிப்பு :இந்த வேலைக்கு மட்டும் நாங்கள் கொடுப்பவரிடம் முயற்சி செய்யுங்கள். வேறு வேலைக்கு அவர்களிடம் முயற்சி செய்து அதிகமாக பணம் வாங்கினால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. நாங்கள் பதிவிடும் வேலைக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பு.
Follow us on : click here
WHATSAPP CHANNEL LINK
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan
