நார்வே செஸ் போட்டி: இந்திய சதுரங்க ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்த குகேஷ்..!!!

நார்வே செஸ் போட்டி: இந்திய சதுரங்க ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்த குகேஷ்..!!!

நார்வே செஸ் சூப்பர் பட்டத்தை மேக்னஸ் கார்ல்சன் 7வது முறையாக வென்றுள்ளார்.

இந்திய கிராண்ட்மாஸ்டர் டி.குகேஷ் மூன்றாவது இடத்தைப் பிடித்து இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தார்.

நார்வே சதுரங்கத் தொடரின் இறுதிச் சுற்றில், இந்தியாவின் டி. குகேஷ் ஃபாபியானோ  கருவானாவை எதிர்த்து விளையாடினார்.

இதில், நேர அழுத்தம் காரணமாக குகேஷ் ஒரு முக்கியமான தவறைச் செய்து தோற்றார். இந்த தோல்வி குகேஷ் முதல் இடத்தை வெல்லும் வாய்ப்பைப் பறித்தது.

அவர் ஒட்டுமொத்தமாக 14.5 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். கருவானா 15.5 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். கார்ல்சன் 16 புள்ளிகளுடன் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்.

முன்னதாக கார்ல்சனை தோற்கடித்து அனைவரின் கவனத்தையும் குகேஷ் ஈர்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே உலக சாம்பியனான குகேஷ், கார்ல்சனை முந்தி நார்வே சதுரங்க பட்டத்தை வெல்வார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இருப்பினும், அது நடக்கவில்லை.

இது இந்திய சதுரங்க ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

Follow us on : click here 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan