வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் கவனத்திற்கு Part-4

வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் கவனத்திற்கு Part-4

வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் கவனத்திற்கு Part-4

நாம் இந்தப் பகுதியில் தொடர்ச்சியாக வெளிநாட்டு வேலைக்கு செல்லும் பொழுது நாம் செய்ய வேண்டியவை செய்யக்கூடாதவை என்னென்ன என்று தெளிவாக பார்த்துக்கொண்டு வருகிறோம்.

இதற்கு முன் நாம் இந்த தொகுப்பில் மூன்று பாகங்களை வெளியிட்டுள்ளோம். அது மிகவும் முக்கியமானது வெளிநாடு செல்பவர்கள் நல்லபடியாக வேலைக்கு செல்ல வேண்டும் என்றால் முதல் பாகத்தில் இருந்து இதை தொடர்ச்சியாக படித்தீர்கள் என்றால் எந்த பிரச்சினையும் இல்லாமல் நல்ல சம்பளத்தில் நீங்கள் நல்லபடியாக வெளிநாட்டு வேலைக்கு செல்ல முடியும்.

இந்த மூன்று பகுதியின் லிங்கையும் இங்கே கொடுத்துள்ளோம்.

இந்தப் பகுதியில் வெளிநாட்டு வேலைக்கு செல்ல ஏஜெண்டுகளை தேர்வு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

நாம் முந்தைய பதிவில் கூறியது போல ஏஜெண்டுகளை தேர்வு செய்வது என்பது உங்கள் வாழ்க்கை துணையை தேர்வு செய்வதற்கு சமமான ஒன்றாகும் அது எதனால் என்று நாம் போன பதிவில் சொல்லியிருந்தோம்.

நீங்கள் ஏஜெண்டை தேர்வு செய்யும் பொழுது அதுவும் குறிப்பாக இந்தியாவில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் ஏனென்றால் பல ஏஜெண்டுகள் ஏமாற்றும் ஏஜெண்டுகளாகவே உள்ளனர்.

நீங்கள் ஏஜென்டிடம் ஏமாறாமல் இருக்க ஒரு சில கேள்விகளை கேட்க வேண்டும்.

1.உங்களிடம் அரசு அனுமதி உள்ளதா??

வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லும் ஊழியர்களின் நலன் கருதி இந்திய அரசாங்கம் பல விதிமுறைகளை வகுத்துள்ளது.

வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புவதற்கான ஏஜெண்டுகள் முறையான அரசு அனுமதி உடன் இயங்க வேண்டும் என்பது இந்திய அரசாங்கத்தின் விதிமுறைகளில் ஒன்றாகும்.

முறையான அனுமதியுடன் இயங்கும் ஏஜெண்டுகள் உங்களை ஏமாற்றுவதற்கான வாய்ப்புகள் குறைவு அப்படி ஏமாற்றினார்கள் என்றால் அவர்கள் மிகப்பெரிய தொகையை அரசாங்கத்திடம் கொடுத்து தான் இந்த அரசு அனுமதியை வாங்கி இருப்பார்கள் நாம் அவர்கள் செய்யும் தவறை அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டினால் நாம் ஏமாந்த பணம் நமக்கு திருப்பி கிடைத்து விடும்.

ஆனால் அரசு அனுமதி இல்லாமல் இயங்கும் ஏஜெண்டுகளிடமிருந்து நாம் செலுத்தும் பணத்தை திருப்பி வாங்குவது என்பது நடக்காத காரியம்.

2.முன்பணம் செலுத்த வேண்டுமா??

நாம் வெளிநாட்டு வேலைக்காக முயற்சி செய்யும் பொழுது ஏஜெண்டுகளிடம் கேட்க வேண்டிய முக்கியமான கேள்வி முன் பணம் செலுத்த வேண்டுமா?? பல ஏஜெண்டுகள் அதிகமான முன் பணத்தை வாங்கிக் கொண்டு வேலையும் வாங்கித் தராமல் பல நாட்களாக இழுத்து அடிக்கின்றனர். இதனால் உங்களுக்கு விசா வராமல் அதிகமான முன் பணத்தை செலுத்த வேண்டாம்.

அப்படி நீங்கள் முன்பணம் செலுத்துகிறீர்கள் என்றால் உங்களுக்கு விசா வந்த பிறகு செலுத்துவது நல்லது பல பேர் ஏஜென்டிடம் இதைக் கேட்காமல் வேலைக்கு முயற்சி செய்வதால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

3.மொத்தத் தொகை எவ்வளவு??

நீங்கள் ஏற்பாடு செய்யும் வேலைக்கு ஆனா மொத்த தொகை எவ்வளவு என்பதை ஏஜென்டிடம் நீங்கள் முன்கூட்டியே கேட்டுக் கொள்ள வேண்டும். ஏனென்றால் ஒரு சில ஏஜெண்டுகள் தொகையை மாற்றி மாற்றியும் அதிகமாகவும் கூறி உங்களை ஏமாற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

அதேபோல் அவர்கள் சொல்லும் தொகையை உங்களால் தயார் செய்ய முடியவில்லை என்றாலும் ஏஜெண்டுகளுக்கும் அது இழப்பு அதனால் நீங்கள் முன்கூட்டியே மொத்தத் தொகை எவ்வளவு என்று கேட்டு அந்த தொகையை உங்களால் தயார் செய்ய முடியும் என்றால் மட்டுமே அந்த வேலைக்கு நீங்கள் முயற்சி செய்ய வேண்டும் .

நம்முடைய அடுத்த பதிவில் ஒரு சில ஏஜெண்டுகளிடம் நீங்கள் சிக்கிக் கொண்டீர்கள் என்றால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது அது யார்?? அவர்களை எப்படி அடையாளம் கண்டு கொள்வது என்று காணலாம்.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan