காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனை..!!! மோசடிச் சம்பவங்கள் தொடர்பாக 313 பேரிடம் விசாரணை…!!!

காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனை..!!! மோசடிச் சம்பவங்கள் தொடர்பாக 313 பேரிடம் விசாரணை...!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையைத் தொடர்ந்து, பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 313 பேர் விசாரிக்கப்படுகிறார்கள்.

15 முதல் 80 வயதுக்குட்பட்ட மொத்தம் 213 ஆண்களும் 100 பெண்களும் விசாரணைக்கு உதவி வருகின்றனர்.

இந்த சோதனைகள் கடந்த மாதம் (ஏப்ரல் 2025) 18 ஆம் தேதி முதல் நேற்று வரை நடந்தன.

சந்தேக நபர்கள் 1,200க்கும் மேற்பட்ட மோசடி சம்பவங்களில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்கள் S$11.9 மில்லியனுக்கும் அதிகமாக இழந்ததாகக் கூறப்படுகிறது.

சந்தேக நபர்கள் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

காவல்துறையினர் இது போன்ற மோசடி சம்பவங்களில் சிக்காமல் இருக்க ஸ்கேம்ஷீல்ட் போன்ற பாதுகாப்பு அம்சங்களை பதிவிறக்கம் செய்ய பொதுமக்களை வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.