சிங்கப்பூரில் தொடரும் மழை!! சுங்கச் சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!!

சிங்கப்பூரில் தொடரும் மழை!! சுங்கச் சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!!

சிங்கப்பூரில் தொடர்ந்து இரண்டு நாட்கள் பெய்த கனமழையால் ஜொகூருக்கு செல்லும் 2 சுங்கச் சாவடிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக குடிநுழைவு,சுங்கச் சாவடிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த தகவல் குறித்து அதன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

பள்ளி விடுமுறை மற்றும் கனமழையால் போக்குவரத்து நெரிசல் மோசமாகி விட்டதாக கூறியது.

வார இறுதியில் நெரிசல் தொடரக்கூடும் என்று ஆணையம் கூறியது.


பயணிகள் அத்தியாவசியமற்ற பயணங்களை ஒத்தி வைக்குமாறு அது அறிவுறுத்தியது.