கர்பத்திற்கான எந்த அறிகுறியும் அவரிடம் இல்லை,அதிகமாக உணவு சாப்பிட்டதால் உடல் எடை கூடியதாக எண்ணியிருந்திருக்கிறார். மருத்துவமனையில் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தி தெரிய வந்ததும் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
குழந்தை பெற்றுக் கொள்ள அவருக்கு திட்டம் இல்லை.
மருத்துவமனைக்கு சென்ற ஒரு மணி நேரத்தில் 2.5 கிலோ எடையுள்ள ஆண் குழந்தை அவருக்கு பிறந்துள்ளது.
அதிர்ஷ்டவசமாக குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தாயும் சேயும் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர்.
செய்தி அறிந்த அந்த பெண்ணின் கணவர் வேறொரு நகரத்திலிருந்து கிளம்பி வந்துள்ளார்.
இணையத்தில் வரும் இந்த சம்பவம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.