மும்பையின் புகழ்பெற்ற சித்தி விநாயகர் கோவிலில் நடைபெறும் பாதுகாப்பு நடவடிக்கைகள்..!!!

மும்பையின் புகழ்பெற்ற சித்தி விநாயகர் கோவிலில் நடைபெறும் பாதுகாப்பு நடவடிக்கைகள்..!!!

இந்தியாவின் மும்பையில் உள்ள புகழ்பெற்ற சித்தி விநாயகர் கோயிலுக்கு நாளை முதல் பக்தர்கள் தேங்காய், மாலைகள் மற்றும் பிரசாதங்களை கொண்டு வர அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மும்பையின் பிரபதேவி பகுதியில் அமைந்துள்ள இந்தக் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

எனவே, அங்கு சில பாதுகாப்பு நடவடிக்கைகளின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் பூசல் நிலவி வருவதால் பாதுகாப்பு காரணங்களுக்காக தற்காலிகமாக இந்தத் தடை விதிக்கப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.