சிங்கப்பூர் கூடைப்பந்து லீக் அதிர்ச்சி...!!! இறுதிப் போட்டிகள் ஒத்திவைப்பு...!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூர் கூடைப்பந்து லீக் (SBL) இறுதிப் போட்டிகள் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளன. இன்று (30.08.25) நடைபெறவிருந்த லீக் ஏ இறுதி போட்டிகள் திடீரென ஒத்திவைக்கப்பட்டன. காரணம் – இடைநீக்கம் செய்யப்பட்ட வீரரை அரையிறுதியில் களமிறங்கியது மூலம் அட்ராய்ட் அணி விதிகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அடுத்த ஞாயிற்றுக்கிழமை (07.09.25) நடைபெறவிருந்த போட்டிகளும் தள்ளிப்போயின.
சிங்கப்பூர் கூடைப்பந்து சங்கம் (SBA) வெளியிட்ட அறிக்கையில், “உள் விசாரணைகள் கடுமையாகவும் நியாயமாகவும் நடைபெறும். பொறுப்புணர்வு மற்றும் விளையாட்டின் நம்பகத்தன்மையை நிலைநிறுத்துவது அவசியம்” என்று தெரிவித்தது. மேலும், மற்ற அணிகள் மற்றும் ரசிகர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டது.
அதே சமயம், வீரர்களின் இடைநீக்கங்கள் நடைமுறையில் தொடரும் என்றும், மேலும் ஒழுங்கு நடவடிக்கைகள் தேவையா என்பதற்கான மதிப்பாய்வும் நடந்து கொண்டிருப்பதாக SBA குறிப்பிட்டது.
ஆனால், ஷெங் குங் கலாச்சார குழு, SBA எடுத்த முடிவை எதிர்த்து கருத்து தெரிவித்தது. “சங்கத்தின் நடவடிக்கைகள் விதிமுறைகளுக்கு ஒத்துப்போவதில்லை” என்று CNA வுக்கு அளித்த பதிலில் கூறியது.
இதற்கு முன்பு, ஊழல் நடைமுறைகள் புலனாய்வுப் பணியகம் (CPIB) வெளியிட்ட அறிக்கையில், கூடைப்பந்து லீக் கையாடல் தொடர்பாக ஒன்பது பேர், அதில் சில வீரர்களும், கைது செய்யப்பட்டனர் என்று அறிவித்தது.பின்னர், சிங்கப்பூர் கூடைப்பந்து சங்கம் (BABA) சம்பந்தப்பட்ட வீரர்களை போட்டிகளில் பங்கேற்பதற்குத் தடை செய்தது.