சிங்கப்பூர் : பிளாக் தூணில் மோதிய BlueSG கார்!! டிரைவரைத் தேடும் காவல்துறை!!

சிங்கப்பூர் : பிளாக் தூணில் மோதிய BlueSG கார்!! டிரைவரைத் தேடும் காவல்துறை!!

உட்லண்ட்ஸ் வீடமைப்பு வளர்ச்சி கழக பிளாக்கின் தூணில் BlueSG ஷேர் கார் மோதிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

கார் பலத்த சேதமடைந்திருந்தது.ஆனால் ஓட்டுநரை காணவில்லை.

அந்த தகவலை 8 world செய்தி நிறுவனம் தந்தது.

மே 21 ஆம் தேதி பிற்பகல் வேளையில் உட்லண்ட்ஸ் கிரசண்ட் பிளாக் 778C இல் விபத்து நேர்ந்தது.

முகநூல் பக்கத்தில் SGRV FRONT MAN எனும் பக்கத்தில் இச்சம்பவத்தின் புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளது.

நடைபாதைக்கு நடுவில் கார் நிறுத்திருப்பதைக் காண முடியும்.

இச்சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

இச்சம்பவம் குறித்து காவல்துறைக்கு மாலை 5 மணியளவில் தகவல் கிடைத்ததாக கூறியது.

காவல்துறை ஓட்டுநரைத் தேடுகிறது.

கார் கட்டுப்பாட்டை இழந்து சறுக்கியதாக காவல்துறை கூறியது.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.