காட்டுத் தீயில் உயிரிழந்த குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த சிங்கப்பூர் பிரதமர் மற்றும் மூத்த அமைச்சர்…!!!

காட்டுத் தீயில் உயிரிழந்த குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த சிங்கப்பூர் பிரதமர் மற்றும் மூத்த அமைச்சர்...!!!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் மற்றும் மூத்த அமைச்சர் லீ சியன் லூங் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

காட்டு தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அங்கு லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

காட்டுத் தீயில் இதுவரை 24 பேர் பலியாகி உள்ளனர்.

இதனால் அங்கு 275 பில்லியன் டாலருக்கு மேல் பொருள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவில் தற்போது நிலவும் மோசமான சூழ்நிலை காரணமாக, இந்த வாரம் சிங்கப்பூருக்கு அதிகரித்துவ பயணம் மேற்கொள்ளவிருந்த அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தனது பயணத்தை ரத்து செய்துள்ளார்.

கமலா ஹாரிஸ் சிங்கப்பூர் தலைவர்களுடன் தொலைபேசியில் உரையாடினார்.

சிங்கப்பூர்-அமெரிக்க உறவுகளை வலுப்படுத்தியதற்காக பைடன் நிர்வாகத்திற்கு திரு.வோங் மற்றும் திரு.லீ நன்றி தெரிவித்தனர்.

பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் புதிய அம்சங்களில் உறவுகளை விரிவுபடுத்த
இருதரப்பும் இணைந்து செயல்பட்டதை அவர்
சுட்டிக்காட்டினார்.

Follow us on : click here ⏬

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilansg