உலகளாவிய தடுப்பூசி கூட்டணிக்கு பெரும் ஆதரவை வழங்கும் சிங்கப்பூர்..!!!
சிங்கப்பூர்: சிங்கப்பூர் அரசானது உலகளாவிய தடுப்பூசி கூட்டணிக்கு (காவி) 1மில்லியன் அமெரிக்க டாலர்களை (S$12,76,136.88)வழங்க உறுதியளித்துள்ளது.
இந்தத் திட்டம் தேவைப்படும் சமூகங்களுக்கு, குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு ஆதரவை வழங்குவதற்காக கொண்டுவரப்பட்டது.
சுகாதார அமைச்சகம் ஒரு அறிக்கையில்,உலகளாவிய மருத்துவம் மற்றும் தடுப்பூசி சமத்துவத்தை உறுதி செய்வதற்கான நாட்டின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக இது இருப்பதாக தெரிவித்துள்ளது.
நோய்களைத் தடுப்பதற்கும், மக்களை நோயிலிருந்து காப்பாற்றுவதற்கும் தடுப்பூசிகள் மிகவும் முக்கியமானது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் இன்னும் தேவையான தடுப்பூசிகளைப் பெற முடியவில்லை.
மேலும் உலகளாவிய தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தி கூட்டணி அரசாங்கங்கள், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை கூட்டாளர்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் எதிர்வரும் பிரச்சனையை சமாளிக்கலாம்.
உலகளாவிய பொது சுகாதார அவசரநிலை ஏற்பட்டால் தொற்றுநோய் மறுமொழி திறன்களை வலுப்படுத்துதல், நோயெதிர்ப்பு அமைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் தடுப்பூசிகளின் நியாயமான விநியோகத்தை உறுதி செய்தல் ஆகியவற்றிலும் கூட்டணி முக்கிய பங்கு வகிக்கிறது.
வலுவான சுகாதார அமைப்புகளை உருவாக்குவதில் கூட்டு நடவடிக்கையின் முக்கிய மதிப்பை சிங்கப்பூர் அங்கீகரிப்பதாகவும், மருத்துவ சவால்களை திறம்பட எதிர்கொள்ள சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் என்பதை உணர்ந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டில் கூட்டணியின் COVID-19 தடுப்பூசி உலகளாவிய அணுகல் வசதி (COVAX) மேம்பட்ட சந்தை உறுதிமொழி நிதி முயற்சிக்கு 5 மில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கியது.
மேலும் 2021 ஆம் ஆண்டில் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு தடுப்பூசிகளை அணுகுவதை ஆதரிப்பதற்காக இந்த வழிமுறை மூலம் 1.6 மில்லியன் டோஸ் தடுப்பூசி ஒதுக்கீட்டை நன்கொடையாக வழங்கியது.
சிங்கப்பூர் அரசு உலகளாவிய தடுப்பூசி கூட்டணியின் பணிகளுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து சிறப்பாக செயலாற்றி வருகிறது.