சிங்கப்பூரின் பொருளாதாரம் முதல் காலாண்டில் 3.9% வளர்ச்சி..!!!

சிங்கப்பூரின் பொருளாதாரம் முதல் காலாண்டில் 3.9% வளர்ச்சி..!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சி 0 முதல் 2 சதவீதமாகவே இருக்கும் என்று வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலகளாவிய நிச்சயமற்ற சூழல் குறித்து வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் (MTI) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் பொருளாதாரம் 3.9 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது முந்தைய 3.8 சதவீத வளர்ச்சி கணிப்பை விட சற்று அதிகம். 2024 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் வளர்ச்சி 5 சதவீதமாக இருந்தது. அது அதை விடக் குறைவு.

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மொத்த வர்த்தகம், உற்பத்தி, நிதி மற்றும் காப்பீட்டுத் துறைகள் வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பைச் செய்தன.