சிங்கப்பூரில் சிங்பாஸ் மோசடி விவகாரம்...!!!6 பேர் கைது..??? இது தொடர்பான தகவலை அறிய இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்..!!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் 15 ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் Singpass தகவல்களை மறுவிற்பனை செய்தது அல்லது மற்றவர்களுக்கு வழங்கியதாக சந்தேகிக்கப்படுகிறார்கள்.
இந்த Singpass விவரங்கள் பிறர் வசம் சென்ற பின்னர், புதிய வங்கிக் கணக்குகள் திறக்கவும், புதிய மொபைல் எண்கள் பதிவு செய்யவும் மோசடிக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.
காவல்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, வணிக விவகாரத் துறை, ஏழு காவல் நிலையங்கள் மற்றும் சிங்பாஸ் மோசடி எதிர்ப்புக் குழு இணைந்து, ஜூலை 8 முதல் 11 வரை தீவு முழுவதும் விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதன் பயனாக 18 முதல் 68 வயதுக்குட்பட்ட 13 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டனர்.
இவர்களில் 19 முதல் 56 வயதுக்குட்பட்ட ஐந்து ஆண்கள் மற்றும் ஒரு பெண், கணினி தொடர்பான மோசடிச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.