இந்த விலையில் இத்தனை அம்சங்களா..? iQOO-வின் புதிய 5G ஸ்மார்ட்போன்..!
ஐக்யூ (iQOO) நிறுவனம் தனது புதிய ‘ஐக்யூ இசட்11 லைட் 5ஜி’ (iQOO Z11 Lite 5G) ஸ்மார்ட்போனை மாணவர்கள் மற்றும் நீண்ட நேர பேட்டரி பயன்பாட்டை விரும்பும் பயனர்களைக் குறிவைத்து வெகு விரைவில் விற்பனைக்கு கொண்டுவர உள்ளது. குறைந்த விலை பிரிவில், உறுதியான வடிவமைப்பு மற்றும் நம்பகமான செயல்திறனுடன் இந்த மாடல் கவனத்தை ஈர்க்கிறது.
ஆயுட்காலம்: 4 ஆண்டுகள் பயன்பாட்டிற்கு பிறகும் 80 சதவீதத்துக்கும் அதிகமான பேட்டரி திறனை தக்கவைக்கும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மென்பொருள் மற்றும் ஏ.ஐ. அம்சங்கள் (Software & AI) இயங்குதளம்:
ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான ஆரிஜின் ஓ.எஸ். 6 (OriginOS 6). ஏ.ஐ. வசதிகள்: ஏ.ஐ. குறிப்புகள் சுருக்கம், குரலை எழுத்தாக மாற்றும் வசதி, பி.டி.எஃப். தகவல் பிரித்தெடுக்கும் வசதி உள்ளிட்ட பல்வேறு ஏ.ஐ. (AI) அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
அப்டேட்கள்: 2 ஆண்டுகள் ஆண்ட்ராய்டு அப்டேட்களும், 4 ஆண்டுகள் பாதுகாப்பு அப்டேட்களும் வழங்கப்படும்.
வடிவமைப்பு மற்றும் கூடுதல் வசதிகள் (Design & Features)
பாதுகாப்பு & சான்றிதழ்: எஎஸ்.ஜி.எஸ். 5-ஸ்டார் ட்ராப் ரெசிஸ்டன்ஸ் சான்றிதழ், ஐ.பி.65 (IP65) தூசி மற்றும் நீர் எதிர்ப்பு வசதி.
விளக்கு: பின்புறம் ஆர்.ஜி.பி. (RGB) அறிவிப்பு விளக்கு (Notification Light). ஒலியமைப்பு: 200 சதவீதம் அல்ட்ரா வால்யூம் ஸ்பீக்கர் மற்றும் 3.5 மி.மீ. ஹெட்போன் ஜாக்.
பாதுகாப்பு சாவி: பக்கவாட்டு கைரேகை சென்சார் (Side Fingerprint Sensor).