ஆசிய விளையாட்டுப் போட்டி வீரர்களுக்கு அதிபரின் பாராட்டு..!!

ஆசிய விளையாட்டுப் போட்டி வீரர்களுக்கு அதிபரின் பாராட்டு..!!

சிங்கப்பூர்: தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூர் அணிகளின் ஒட்டுமொத்த செயல்திறனே மிக முக்கியமான சாதனை என ஜனாதிபதி தர்மன் சண்முகரத்னம் தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட விளையாட்டு வீரர்களின் வெற்றிகளைவிட,அணியாக இணைந்து செயல்பட்டதே குறிப்பிடத்தக்க அம்சம் என அவர் கூறினார். விளையாட்டு மட்டுமல்ல,பிற துறைகளிலும் குழுப்பணி மிக அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த ஆண்டு நடைபெற்ற தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக விளங்கிய பல அணிகளின் பெயர்களை ஜனாதிபதி தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார். பல தங்கப் பதக்கங்களை வென்ற சாந்தி பெரோரா,ஷென் எனி மற்றும் யான் சின்ஹுய் ஆகியோரையும், வெற்றிகளை பெற்ற அணிகளையும் அவர் பாராட்டினார்.

இளைஞர்களுக்கான வாட்டர் போலோ அணியின் சாதனையை எடுத்துக்காட்டிய அவர்,பெரும்பாலானோர் முதல் முறையாகப் பங்கேற்ற நிலையிலும்,அந்த அணி இந்தோனேசிய அணியை வீழ்த்தியதை நினைவுகூரினார். அதேபோல், ஆண்கள் மற்றும் பெண்கள் அணி நிகழ்வுகளிலும், ஃபாயில் மற்றும் எபி பிரிவுகளிலும் தங்கம் வென்ற ஃபென்சிங் அணியின் துணிச்சலான செயல்திறனையும் அவர் பாராட்டினார்.
காயங்கள் இருந்தபோதிலும், இறுதிப் போட்டியில் வியட்நாமை தோற்கடித்த ஆண்கள் டேபிள் டென்னிஸ் அணியின் போராட்ட குணத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மேலும், ஆண்களுக்கான 4×100 மீட்டர் ஃப்ரீஸ்டைல் ரிலேவில் தங்கம் வென்ற அணியினரையும்,பெண்களுக்கான 4×100 மீட்டர் மெட்லி ரிலேவில் மீட் சாதனையை முறியடித்த நீச்சல் அணியினரையும் அவர் பாராட்டினார்.

ஒரு சிறிய நாடாக இருந்தும், நம்மைவிட பெரிய நாடுகளுடன் போட்டியிட்டு சிங்கப்பூர் விளையாட்டு வீரர்கள் பெற்றுள்ள இந்த சாதனைகள் பெருமை அளிப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கையும் அவர் வெளிப்படுத்தினார்.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK