விடுமுறை கொண்டாட்டமாக சுற்றுலா சென்ற நபருக்கு நேர்ந்த துயரம்...!!!
தியோமன் தீவு (மலேசியா):சிங்கப்பூரைச் சேர்ந்த 72 வயதான ஓய்வு பெற்ற பொறியாளர் ஒருவர், மலேசியாவில் உள்ள டியோமன் தீவிற்கு தனது நண்பர்களுடன் விடுமுறைக்குச் சென்றபோது, டைவிங் செய்யும் நேரத்தில் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவரின் பெயர் லோ சூன் ஃபோய் என்று அறியப்படுகிறது.
இவர் தனது 14 நண்பர்களுடன் ஜூலை 5ஆம் தேதி காலை 10.30 மணியளவில் ரோம்பின் பகுதியில் உள்ள ஒரு ரிசார்ட்டில் தங்கியிருந்தார்.
அவர்கள் ஜூலை 6ஆம் தேதி சிங்கப்பூர் திரும்புவதாக திட்டமிட்டிருந்தனர்.
இறந்தது எப்படி..???
இறந்தவர் ஜூலை 5ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு கம்போங் பயா கடற்கரைக்கு தனது நண்பருடன் டைவிங் செய்யச் சென்றார். ஆனால் இரவு 7.40 மணிக்கு, அவரது நண்பர் கடற்கரையில் அவரை மயக்கமடைந்த நிலையில், வாயில் நுரை வெளியேறிய நிலையில் கண்டுபிடித்தார்.
உடனடியாக ரிசார்ட் ஊழியர்கள் அவருக்கு முதலுதவி அளித்து அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
ஆனால் மருத்துவமனையில் இரவு 9.20 மணிக்கு அவர் மரணமடைந்ததாக உறுதிப்படுத்தப்பட்டது.
முதற்கட்ட விசாரணையின்படி, எந்த குற்றவியல் கூறுகளும் இதில் காணப்படவில்லை.
எனவே, இது ஒரு திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தையொட்டி, காவல் துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள், டைவிங் செய்வதற்கு முன் ஆர்வலர்கள் போதுமான ஓய்வும், உடல் நலமும் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.