சூறாவளி எச்சரிக்கை..!!சிங்கப்பூர்-ஹாங்காங் விமான சேவைக்கு தடை..!!
சிங்கப்பூர்: ஹாங்காங் மற்றும் ஷென்செனில் வெப்பமண்டல சூறாவளி நிலவி வருகிறது.
சூறாவளியின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சிங்கப்பூரிலிருந்து ஹாங்காங் மற்றும் ஷென்சென் செல்லும் பல விமானங்கள் இன்று (20.07.25) ரத்து செய்யப்பட்டன.
ஹாங்காங் ஆய்வகம் அதிகபட்ச எச்சரிக்கையான எண்.10 சூறாவளி சமிக்ஞையை வெளியிட்டது. அப்பகுதியில் மணிக்கு 118 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சாங்கி விமான நிலையத்தின் தகவலின்படி, SQ892 மற்றும் SQ894 என இரண்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. SQ892, தாமதிக்கப்பட்டபினும், புறப்படாமலே நிறுத்தப்பட்டது.
கேத்தே பசிபிக் நிறுவனத்தின் 8 விமானங்களில் 6 ரத்து செய்யப்பட்டுள்ளன.
பாதுகாப்புக்காக அதிகாரிகள் சூழ்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.