சிங்கப்பூரில் பணிப்பெண்களுக்கு தட்டம்மைக்கு எதிராக எதிர்ப்பு சக்தி உள்ளதா என்பது பரிசோதிக்கப்படும் என்று மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதை நிரூபிக்க முடியாத முதலாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சகம் கூறியது.
தட்டமைக்கு தடுப்பூசி சான்றிதழை வழங்கும் வரை அவர்களின் வேலை அனுமதிச் சலுகைகள் ரத்து செய்யப்படும்.
தட்டம்மைக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போட்டுகொள்ளதாக இளம் பிள்ளைகள் உள்ள வீட்டில் பணி புரியும் பணிப்பெண்கள் தட்டம்மை தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று அமைச்சகம் சமீபத்தில் அறிவித்தது.