பொதுமக்களே எச்சரிக்கை…!!! இந்த மருந்தை இனி உட்கொள்ள வேண்டாம்…!!!!

பொதுமக்களே எச்சரிக்கை...!!! இந்த மருந்தை இனி உட்கொள்ள வேண்டாம்...!!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பொதுமக்கள் “CuraLin advanced glucose support” என்றழைக்கப்படும் சப்ளிமென்ட்டைப் பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் குறிப்பிடப்படாத பொருட்கள் அதில் இருப்பது கண்டறியப்பட்டது.

இது குறித்து சுகாதார அறிவியல் ஆணையம் (HSA) பொதுமக்களை எச்சரித்துள்ளது.

இந்த மருந்து மூலிகைகளில் இருந்து தயாரிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் பரிசோதனையில் “கிளிபென்கிளாமைடு” மற்றும் “மெட்ஃபோர்மின்” ஆகிய பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

அந்த பொருட்கள் அடங்கிய மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ளக் கூடாது என்று ஆணையம் கூறியுள்ளது.

சப்ளிமெண்ட் விற்பனையை உடனடியாக நிறுத்துமாறு அதன் விநியோகஸ்தருக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இது அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருளாகும்.

இந்த மருந்துகள் ஷாப்பி மற்றும் லாசாடா உள்ளிட்ட உள்ளூர் இ-காமர்ஸ் தளங்களிலும் விற்கப்பட்டது.

மேலும் இதை மருத்துவ ஆலோசனை இன்றி எடுத்துக் கொண்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு மிகவும் மோசமாக குறைந்து வலிப்பு, சுயநினைவு இழப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.